உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

ஊனமுற்றோர்களுக்கு வழிகாட்டியாக அரசு விளங்குகிறது: எம்.எல்.ஏ., பேச்சு

கடலூர் : 

              தி.மு.க., ஆட்சியில் தான் அனைவரின் எண் ணங்களும் ஈடேறும் வகையில் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.
 
             மாவட்ட மறுவாழ்வு அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் லியனார்ட் செஷியர் டிசபிலிட்டி சார்பில் ஊனமுற்றோர் மறுவாழ்வு வேலைவாய்ப்பு கருத்தரங்கம் கடலூரில் நடந்தது. லியனார்ட் செஷியர் டிசபிலிட்டி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் முரளிதரன் வரவேற்றார். திட்ட மேலாளர் அசோக்குமார் விளக்கவுரையாற்றினார். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தில்லைநாதன், எல்.சி.டி., திட்ட அலுவலர் சிவராம் தேஷ் பாண்டே, திட்ட ஒருங்கிணைப்பாளர் துஷாரா பாஸ்கர் மற்றும் 60க்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசுகையில் "ஊனமுற்றோர்களுக்காக அரசு பல்வேறு நலத்திட் டங்களை வழங்கி வருவதோடு, அவர்களுக்கு வேலை வய்ப்பில் இடஒதுக்கீடு அளித்து வழிகாட்டி வருகிறது. ஊனமுற்றோர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைவாய்ப்பளிக்கும் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு அந்நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சுயமாக தொழில் துவங்குவதற்கும் கடன் வழங்கப்படுகிறது. உங்களுக்காக உதவி செய்ய அதிகாரிகள் காத்திருக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் தான் அனைவரின் எண் ணங்களும் ஈடேறும் வகையில் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். ஊனமுற்றோர்களுக்கு உதவுவதில் அரசுடன் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior