உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் பரிசோதனை செய்வதில் இழுபறி

திட்டக்குடி : 

            தவறான அறுவை சிகிச்சையால் இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
 
          திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (28). இவரது ஒன்னரை வயது மகன் சந்தோஷின் ஆணுறுப்பு வீங்கியதால் கடந்த 30ம் தேதி பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தபோது இறந்தார். குழந்தையை முறைப்படி புதைத்த ராஜா, பின்னர் தவறான அறுவை சிகிச்சையால் தனது குழந்தை இறந்துவிட்டதாக பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். மேலும் சிறுநீரகவியல் துறை நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தந்தி அனுப்பினார். அதனையொட்டி புதைக்கப்பட்ட குழந்தை சந்தோஷ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்திட அனுமதி கோரி போலீசார் திட்டக்குடி தாசில்தாரிடம் கடிதம் கொடுத்தனர். அதனை தாசில்தார், திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்தார். மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே சிறப்பு குழுவினர் பணிபுரிவார்கள் என்பதால் எங்களால் செய்ய இயலாது என திட்டக்குடி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. திருச்சி மருத்துவக் கல்லூரி நிர்வாகமோ கடலூர் மாவட்டம் எங்களுக்கு வராது எனக் கூறியது. கடலூர் அரசு தலைமை மருத்துமனை நிர்வாகமோ எங்களிடம் சிறப்பு மருத்துவர்கள் இல்லை என்பதால் செங்கல்பட்டு மருத்துவக்கல் லூரியை அணுகுமாறு தெரிவித்தனர். செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ் சிபுரம், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய முடியுமென செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
 
                    பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப் பியதற்கு, இங்கு சிறப்பு நிபுணர்கள் இல்லாததால், சென்னை மருத்துவ கல்வி இயக்குனரிடம் முறையிடுமாறு கடிதம் வந்துள்ளது. இறந்த 15 மாத குழந்தையின் உடலை புதைத்து 12 நாட்களாகியும், அதனை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடியாததால், குழந்தையின் பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior