உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

புவனகிரியில் போலி பிராந்தி தொழிற்சாலை : புதுச்சேரி ஆசாமி சிக்கினார்: மூவருக்கு வலை

புவனகிரி : 

            புவனகிரியில் போலி பிராந்தி தயாரித்த புதுச்சேரி ஆசாமியை போலீசார் கைது செய்தனர். போலி பிராந்தி தயாரிக்க பயன்படுத்திய சாராயம், பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து, தலைமறைவாக உள்ள மூவரை தேடிவருகின்றனர்.
 
            கடலூர் மாவட்டம், புவனகிரி போலீசார் கடந்த 6ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்தப்பாடி பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த புவனகிரி சிவக்குமார்(57), குமார்(27), வயலாமூர் காண்டீபன்(30), குபேந்திரன் (37), சொக்கங்கொல்லை மதியழகன்(54) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.  விசாரணையின் போது அவர் கள் பிராந்தி பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பிராந்தி பாட்டில்களில் ஒட்டியிருந்த ஆயத்தீர்வை ஸ்டிக்கரில் வித்தியாசம் தெரிந்ததால் சந்தேகமடைந்த போலீசார், ஐந்து பேரையும் தீவிரமாக விசாரித்ததில் அவர்கள் வைத்திருந்தது போலி பிராந்தி பாட்டில்கள் என்பது தெரிய வந்தது. அதன்பேரில் ஐந்து பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து தீவிரமாக விசாரிக்குமாறு டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் உத்தரவிட்டதன்பேரில், சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், புதுச்சேரி மாநிலம் அரங்கனூரை சேர்ந்த வெங்கடேசன் (33) மற்றும் சிலர் புதுச்சேரியில் இருந்து சாராயம், காலி பாட்டில்கள் மற்றும் போலி லேபிள்களை புவனகிரிக்கு கடத்தி வந்து போலி பிராந்தி தயாரித்து இரவில் அருகில் உள்ள கிராமங்களுக்கு எடுத்து சென்று விற்பது தெரிய வந்தது. இதற்கிடையே நேற்று காலை புவனகிரி பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரங்கனூர் வெங்கடேசனை   போலீசார் கைது செய்தனர். அவர் கூறிய தகவலின்பேரில் போலி பிராந்தி தயாரிக்கும் தொழிற்சாலையாக பயன்படுத்தி வந்த புவனகிரி ஏ.எஸ்.ஆர்., நகரில் உள்ள வாடகை வீட்டை சோதனையிட்டனர். அங்கிருந்த சாராயம், போலி பிராந்தி பாட்டில்கள், காலி பாட்டில்கள், லேபிள், ஆயத்தீர்வு ஸ்டிக்கர்களை பறிமுதல் செய்தனர். பின்னர் தொழிற்சாலையாக பயன்படுத்திய வீட்டிற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள புதுச்சேரி ஆனந்தவேலு, சொக்கங் கொல்லை டாஸ்மாக் கடை விற்பனையாளர் தியாகராஜன், கார் டிரைவர் வயலாமூர் ஆனந்தராஜ் ஆகியோரை போலீசார்  தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior