உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 11, 2010

சிதம்பரம் நகராட்சி பூங்காக்கள் பராமரிப்பின்றி வீணாகிறது! அக்கறை எடுத்துக் கொள்ளத்தான் ஆளில்லை

சிதம்பரம் : 

                சிதம்பரம் நகரை அழகு படுத்தி, சிறுவர் களை மகிழ்விக்கும் நோக் கில் நகரில் பல இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த பூங்காக்கள் அத்தனையும் பராமரிப்பின்றி பாழடைந்துவிட்டது.
 
             சுற்றுலா நகரமான சிதம்பரத்தை அழகு படுத்த சுற்றுலா துறையின் ஸ்ரீ ஆதிசங்கரா சுற்றுலா சர்க்யூட் திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு பல் வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. அதில் மக்கள் நடந்து செல்ல வசதியாக சாலையோர நடைபாதைகள் அமைக்கப்பட்டன. நகர பிரதான நான்கு வீதிகள் மட்டுமல்லாது, 3 லட்சம் ரூபாய் செலவில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் நடைபாதை, வேணுகோபால் பிள்ளை தெருவில் 27 லட்சத்தில் நடைபாதை, நடராஜர் கோவிலின் நான்கு சன்னதியிலும் 19 லட்சத்தில் சிமெண்ட் தளத்துடன் கூடிய நடைபாதை அமைக் கப்பட்டது. அத்துடன் சீரழிந்து கிடந்த காந்தி பூங்கா  5 லட்சம் ரூபாய் செலவிலும், கோவிந்தசாமி தெரு பூங்கா 3 லட்சம் செலவிலும், மன்மதசாமி நகர் பூங்கா  3 .5 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. பஸ் நிலையம் முகப்பு பகுதியில் 3 லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டது. கீழ வீதி கழிப்பிடம் 12 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்டது. பஸ் நிலையம் அருகே உள்ள மணிகூண்டு ஒரு லட்சம் செலவில் புதுப்பிக் கப்பட்டது. இந்த பணிகள் அப்போதைய கலெக்டர் ககன்தீப் சிங் பேடியின் முயற்சியால் மேற்கொள் ளப்பட்டன.
 
         ஆர்.எஸ்.வி.ஓய்., கலெக்டரின் தன்னிறைவு திட்டம், சிறுசேமிப்பு ஊக்க நிதி மற்றும் நகராட்சி பொது நிதிகள் மூலம் 27லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் மேலும் பல பூங்காக்கள், படகு குழாம், செயற்கை நீரூற்று ஆகியன அமைக்கப்பட்டுள் ளது.  இதில் பஸ் நிலைய நுழைவு வாயிலில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மதிப்பில் டால் பின் நீரூற்றுடன் கூடிய ரவுண்டானா, பஸ் நிலையத்தில் 1 லட்சம் மதிப்பில் பூங்கா, சிறுசேமிப்பு நிதி 9 லட்சத்தில் சபாநாயகர் தெரு ஆயிக்குளத்தில் படகு குழாம் மற்றும் சாலையோர பூங்கா அமைக்கப்பட்டது. மின் நகரில் ராஷ்டிரிய சம்விகாஸ் யோஜனா திட்டத் தில் 5 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா, ஆர்.எஸ். வி.ஒய் திட்டத்தில் சிதம்பரம் நுழைவாயிலில் 7 லட்சம் ரூபாய் செலவில் செயற்கை நீரூற்றுடன் கூடிய சாலையோர பூங்கா அமைக்கப்பட்டது. இப்படி பல லட்சம் ரூபாய் செலவில் நகரை அழகுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்ட பூங்காக் கள் கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி அப்போதைய கல்வித் துறை அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார். சிதம்பரம் நகரில் சிறுவர்களுக் கும், பொதுமக்களுக்கும் பொழுது போக்கு இடம் இல்லாமல் இருந்த நிலையில் நகரில் அனைத்து பகுதிகளிலும் அமைக்கப் பட்ட பூங்காக்கள் பயனுள்ளதாக அமைந்தன. மாலை நேரங்களில் குழந் தைகளுடன் பொதுமக்கள் பூங்காக்களுக்கு வந்து பொழுதை களித்தனர். குழந்தைகள் அங்குள்ள ராட்டினம், சருக்கு மரம், ஊஞ்சல் ஆகியவற்றில் விளையாடி மகிழ்ந்தன. சபாநாயகர் தெரு ஆயிகுளத்தில் பொதுமக்கள் குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர்.
 
           இப்படியாக மின் விளக்கு வெளிச்சம், புல் தரை, நீரூற்று, இருக்கைகள் என இருந்த பூங்காக்கள் பராமரிப்பின்றி சீரழிந்துவிட்டது. பூங்காக்களை திறந்ததோடு சரி நகராட்சி நிர்வாகம் எட்டிக் கூட பார்க்க முன்வரவில்லை. படகு குழாமில் ஒரு படகுகூட ஓடவில்லை. அத்தனை பூங்காக்களிலும்  இருக்கைகள், குழந்தைகள் விளையாடும் சருக்கு மரம், ஊஞ்சல் என அனைத்தும் உடைந்துவிட்டது. 

                           மதிற்சுவர்கள் கேட்டுகள் உடைக்கப்பட்டுவிட்டன. சிதம்பரம் நகர நுழைவாயில் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் புதர்கள் மண்டி முட்செடிகள் வளர்ந்து விஷ ஜந்துக் கள் குடியிருக்கும் இடமாக மாறிவிட்டது. மாலை நேரங்களில் போதை ஆசாமிகள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் முறையிட்டும் பலனில்லை. பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நகர பூங்காக்களை சில லட்சம் செலவு செய்து சீரமைத்து முறையாக பராமரித்தால் நகர மக்களுக்கும் பயன்படும். நகரமும் பொலிவு பெறும். இதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior