நடுவீரப்பட்டு :
நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடை பந்து ஆடுகளம் சிமென்ட் தரை போடாததால் வீணாகி வருகிறது.
'
'
நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 1300 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். கடலூர் ஒன்றியத்திலேயே இந்த பள்ளியில் மட்டுமே பெரிய விளையாட்டு மைதானம் உள் ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு இடையேயான ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் பைக்கா விளையாட்டு போட்டிகள் இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கூடைப் பந்து விளையாட இரண்டு ஆடுகளம் அமைக்கப்பட்டது. இதில் ஒன்று இரும்பு பைப்பினாலும், மற்றொன்று சிமென்ட் போஸ்ட்களாலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு ஆடுகளத்திலும் மாணவ, மாணவிகள் விளையாடக் கூடிய வகையில் சிமென்ட் தரைகள் அமைக்கவில்லை. மண் தரையாக உள்ளதால் குண்டும், குழியுமாகவும், செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள் பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. இதனை போக்கி கூடைப்பந்து ஆடுகளத்தில் சிமென்ட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக