புதுச்சேரி :
புதுச்சேரியில் மத்திய கலால் வரி தின விழா நேற்று நடந்தது. ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் கலால் துறை கமிஷனர் ராவ் வரவேற்றார். முதன்மை விருந்தினரான வருமான வரித்துறை கமிஷனர் செந்தாமரைக் கண்ணன் சிறப்புரையாற்றினார். இவர், கடந்தாண்டு அதிக கலால் வரி மற்றும் சேவை வரி செலுத்திய 5 பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களான கடலூர் பி.எஸ். என்.எல்., ஹிந்துஸ்தான் யுனிலீவர், இயற்கை எண்ணெய் வாயு, விப்ரோ மற்றும் லாவண்யா இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களுக்கு "சன்மான்' விருது வழங்கினார்.
சிறந்த சேவை புரிந்து ஜனாதிபதி விருது பெற்றமைக்காக புதுச்சேரி கலால் துறை இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன் கவுரவிக்கப்பட்டார். மேலும், கலால் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் உற்பத்தியாளர்கள், வணிக பிரதிநிதிகள், பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூடுதல் கமிஷனர் குருநாதன் நன்றி கூறினார். புதுச்சேரி மத்திய கலால் மற்றும் சேவை வரி ஆணையம் நடப்பு நிதியாண்டில் இதுவரை 288 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கலால் துறையின் பங்கு 168 கோடி ரூபாய், சேவை வரியின் பங்கு 120 கோடி ரூபாய் ஆகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக