கடலூர்:
கடலூர் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆலமரம் என்ற தொண்டு நிறுவனம் உப்பனாற்றுப் பகுதியில், அவிசீனியா என்ற மாங்ரோவ் காட்டு மரங்களை நட்டு வருகிறது. கடலூர் உப்பனாற்றுக் கரையோரப் பகுதிகளில் பல ரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்து உள்ளன. இவற்றால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. அவிசீனியா மரங்கள் இந்த நச்சுக் காற்றை உறிஞ்சி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தன்மை அதிகமாகக் கொண்டது. எனவே ஆலமரம் அமைப்பு உப்பனாற்றின் கரையோரப் பகுதிகளில் 10 கி.மீ. தூரத்துக்கு, அவிசீனியா மரக்கன்றுகளை நட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் சுரேந்திரன் தலைமையில் உறுப்பினர்கள் நொச்சிக்காடு பகுதியில் சனிக்கிழமை 1000-க்கும் மேற்பட்ட அவிசீனியா மரக்கன்றுகளை நட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக