உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

வெறிச்சோடிய கடற்கரை

கடலூர்:

            கடலூரில் ஞாயிற்றுக்கிழமை சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து கடற்கரைப் பகுதிகள் வெறிச்சோடின. ஞாயிற்றுக்கிழமை காலை இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே பூமி அதிர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை மாலை சுனாமி பேரலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரித்தனர். கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள 57 கடலோரக் கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது. தாழ்வான பகுதிகளில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்று இருந்த மீனவர்களும் வேகமாகக் கரை திரும்பினர்.÷மாவட்டக் காவல் கணகாணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தலைமையில் போலீஸôர் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று எச்சரிக்கை விடுத்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். கடலூர் சில்வர் பீச்சுக்குச் செல்வோர் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப் பட்டனர். ஞாயிற்றுக்கிழமைகளில் கடலூர் சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சுனாமி எச்சரிக்கை காரணமாக சில்வர் பீச் வெறிச் சோடிக் கிடந்தது. மீனவர் கிராமங்களில் மக்கள் மிகவும் சோகத்துடன் காணப்பட்டனர். எனினும் பிற்பகலில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior