சிறுபாக்கம்:
மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் சிறு, குறு விவசாயிகள் பயிர் செய்த மரவள்ளியில் மஞ்சள் காரை நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மங்களூர், நல்லூர் ஒன்றியங்களைச் சேர்ந்த வேப்பூர், பெரியநெசலூர், சேப்பாக்கம், சிறுபாக்கம், கழுதூர், அரியநாச்சி, காட்டுமைலூர், அடரி, ஒரங்கூர், வள்ளிமதுரம், மங்களூர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் விளை நிலத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை செய்து வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கரும் புக்கு போதிய விலை கிடைக்கப்பெறாததாலும், வெட்டுக்கூலி உயர்வு மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான விவசாயிகள் தங்களின் விலை நிலங்களில் கரும்பு பயிரை தவிர்த்தனர்.இந்நிலையில் அதிக விலை கிடைக் கும் குங்குமரோஸ், பர்மா, ரோஸ் ரக மரவள்ளி பயிர்களை கடந்த ஜனவரி முதல் பயிர் செய்து களை எடுத்து நீர்பாய்ச்சி வருகின்றனர்.தற்போது மரவள்ளி பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் திடீரென மஞ்சள் காரை நோய் தாக்கி வளர்ச்சி பெறாமல் கருகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டு களாக மரவள்ளிக்கு போதிய விலை கிடைத்த ஆர்வத்தில் தங்களது விளை நிலத்தில் மரவள்ளி பயிர்களை செய்த நிலையில் மஞ்சள் காரை நோய் தாக்கு தலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக