உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பருவமழைக்கு முன் முடிவடையும்


கடலூர்:
 
                   ரூ. 20 கோடியில் நடைபெற்று வரும் வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்புப் பணிகள் பருவமழைக்கு முன் முடிவடையும் என்று, பொதுப் பணித்துறை முதன்மைச் செயலர் ராமசுந்தரம் தெரிவித்தார். திட்டக்குடியை அடுத்துள்ள வெலிங்டன் ஏரி 1918-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் 64 கிராமங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
 
              ஏரிக்கரையில் போடப்பட்டு இருந்த மண்ணின் தரம் காரணமாக கரை தொடர்ந்து பூமிக்குள் புதைந்து வந்தது. இதனால் ஏரியின் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 2007-ம் ஆண்டு ஏரிக்கரை பெருமளவுக்குச் சேதம் அடைந்தது. ஏரிக்கரை ரூ. 20 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
 
அங்கு நடைபெற்று வரும் பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் ராமசுந்தரம் சனிக்கிழமை பார்வையிட்டு அவர் கூறியது:
 
              வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தொழில்நுட்ப நிபுணர் மோகன கிருஷ்ணன் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தற்போது பணிகள் நடந்து வருகின்றன. கரையில் இருந்த மோசமான மண் 900 மீட்டர் நீளத்துக்கு முழுமையாக அகற்றப்பட்டு புதிய தரமான மண் போடப்பட்டு கரை சீரமைக்கப்பட்டு வருகிறது. கீழ் பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்து அதன்மேல் கரை அமைக்கப்பட்டு வருகிறது.÷80 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன. பருவமழை தொடங்கும் முன் இந்தப் பணிகளை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தேவைப்படின் கூடுதல் நிதி ஒதுக்கி குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். வெலிங்டன் ஏரியைத் தூர்வாருவது குறித்து பரிசீலித்து வருகிறோம். வெலிங்டன் ஏரியின் துணை ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மராமத்து செய்யப்படும். வெள்ளாற்றில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு ரூ.164 கோடியும், கெடிலம் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்த ரூ. 68 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.÷வெலிங்டன் ஏரி உள்பட பல்வேறு ஏரிகளில் பொழுதுபோக்குக்காக பூங்காக்கள் அமைக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார் ராமசுந்தரம். பொதுப்பணித்துறை முதன்மைப் பொறியாளர் அன்பழகன் உடன் இருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior