சிதம்பரம்:
சிதம்பரம் வாகீச நகர் விளையாட்டுத் திடலுக் கான இடத்தில் கழிவு நீர் தேங்கி இருப்பதை சரி செய்ய வேண்டும் என நலச்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள் ளனர்.
இது குறித்து வாகீச நகர் நலச் சங்கத்தினர் சிதம்பரம் நகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு:
சிதம்பரம் வாகீச நகர் துவங்கி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் தற்போது 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதி மக்களின் கோரிக் கையை ஏற்று விளையாட்டு திடலுக்கு ஒதுக்கப் பட்ட இடம் கடந்த 20 ஆண்டுகளாக சரி செய்யப் படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் மழை மற்றும் சாக்கடை தேங்கியதில் ஆகாயத் தாமரைகளுடன் முட்புதற்கள் மண்டியுள்ளதால் பன்றிகளின் கூடாரமாக மாறி விட்டது. இதனால் கொசு உற்பத்தியும், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது குறித்து பல முறை மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது கோடை காலம் துவங்கிய நிலையில் பன்றியின் தொல்லை அதிகரித்துள்ளதால் சுகாõதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலை நிலவுகிறது.எனவே அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பாடமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக