உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

சிவில் சர்வீஸ் தேர்வில் பண்ருட்டி இளைஞர் வெற்றி

பண்ருட்டி : 

               பண்ருட்டியைச் சேர்ந்த இளைஞர், சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 130வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். பண்ருட்டி அருள்ஜோதி நகரைச் சேர்ந்த சக்ரவர்த்தி மகன் ராம்குமார்(25). மகாராஷ்டிராவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து பின், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னையில் உதவி ஆணையராக (கமர்ஷியல்) கடந்த ஆறு மாதங்களாக பணிபுரிகிறார். கடந்த இரண்டு முறை இந்திய அளவிலான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்தார். 2009ல் நடந்த பொது, மெயின் தேர்வில் தேர்ச்சியடைந்து கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றார். 875 பதவிகளுக்கு நடந்த ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் இந்திய அளவில் 130வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்ரவர்த்தி, கோலியனூரில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிகிறார்.

வெற்றி பெற்ற ராம்குமார் கூறியதாவது: 

                 நான் கடந்த மூன்று ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, கடந்த ஏப்ரலில் நடந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றேன். விருப்ப பாடமாக புவியியல், தமிழ் இலக்கியம் தேர்ந்தெடுத்தேன். சிவில் சர்வீஸ் பணிகளில் ஐ.எப்.எஸ்., பணியை முதல் விருப்பமாகக் கேட்டுள்ளதால் ஐ.எப்.எஸ்., பணி கிடைக்கும். தேர்வில் வெற்றி பெறுவதற்கு பெற்றோர் தான் காரணம். நாட்டு நடப்புகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். பொது அறிவு முக்கியம், பொது விஷயத்தை ஆராய்ந்து, விரிவாக படிக்க வேண்டும். வேறு சிந்தனைகளை கைவிட்டு படிப்பில் ஆர்வம் காட்டினால், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம். இவ்வாறு ராம்குமார் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior