திட்டக்குட:
திட்டக்குடி அருகே இரு இடங்களில் துணைமின் நிலையங்கள் அமைக்கும் நிலத்தை கலெக்டர் சீத்தாராமன் நேரில் ஆய்வு செய்தார். திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, ஈ.கீரனூர் பகுதிகளில் துணைமின் நிலையம் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் காலை கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன் ஆகியோர் துணைமின் நிலையம் அமைக்கும் நிலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்படி ஆவினங்குடி துணைமின் நிலையத்திற்கு போத்திரமங்கலம் கிராமத்தில் அரசு நிலமும், ஈ.கீரனூரில் தனியார் நிலம் தேர்வு செய்யப்பட்டு விலைக்கு வாங்க தீர்மானிக்கப்பட்டது. கலெக்டர் ஆய்வின் போது ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் கண் ணன், துணை தாசில்தார்கள் மணி, திருநாவுக்கரசு, ராமமூர்த்தி, பாலு உட்பட கிராம மக்கள் பலர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக