உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

26ம் தேதி சிறப்பு கிராம சபா கூட்டம்பொதுமக்கள் பங்கேற்க கலெக்டர் அழைப்பு


கடலூர்: 

                  கடலூர் மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபா கூட்டத்தில் பொது மக்கள் திரளாக பங்கேற்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

                கிராமங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஒவ்வொரு ஊராட்சிக்கும் 20 லட்சம் ஒதுக்கீட்டில் 2006-07ம் ஆண்டு முதல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப் பட்டு வருகிறது. 2010-11ம் ஆண்டில் இம் மாவட்டத்தில் மேலும் 140 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

                       அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ் வொரு ஊராட்சியிலும் பணிகளை தேர்வு செய்யவும், பணிகள் மேற்கொள்ள வேண்டிய இடங் களை இறுதி செய்யவும், ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), ஒன்றிய பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கொண்ட குழு கிராம மேம்பாட்டிற்கான தேவைகளை அறிந்து அதன் அடிப்படையில் தேர்வு செய்த பணிகள் 26ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபாவில் வைத்து ஒப்புதல் பெறப்படவுள்ளது. கிராம சபா கூட்டத் தினை சிறப்பாக நடத்த சம்மந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும், துண்டு பிரசுரங்கள், ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் விளம்பரம் செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம பொது மக்கள் திரளாக கலந்துக்கொண்டு கிராமசபா கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior