உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

தொடரும் எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகளின் சுரண்டல் புகார்தனிக்குழு அமைத்து கண்காணிக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

                   அனைவருக்கும் கல்வி திட்டத்தில் அரசு வழங் கும் தொகையினை சுரண் டும் அதிகாரிகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க் கின்றனர். கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் கற்றல் கற்பித்தல் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு செயல்வழிக்கற்றலை சிறப்புடன் செயல்படுத்திட பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

                   கடந்த 2008- 09ம் கல்வியாண்டில் செயல்வழிக்கற்றல் அட் டைகளில் கடினமான பாடப்பகுதிகள், குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையொட்டி 2009- 10ம் கல்வியாண்டில் செயல்வழிக் கற் றல் அட்டைகள் மாற்றம் பெற்று கடின பகுதிகளை நீக்கி, புதிய கற்றல் அட்டைகள் வடிவமைத்து வட்டார வள மையங்கள் மூலம் வழங்கப்பட்டன. ஒவ்வொரு ஒன்றியத்திலுள்ள வட்டார வளமையத்தின் மூலம் அதன் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளுக்கு புதுப்பித்த அட்டைகளை நேரடியாக வழங்கிட அனைவருக்கும் கல்வி திட்ட மையம் மூலம் வட்டார வள மையத்திற்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கியது.கடந்த 2009ம் ஆண்டு இறுதியில் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான கற்றல் கற்பித்தல் அட்டைகளை, அந்தந்த பள்ளி ஆசிரியர்களே வட்டார வளமையத்திற்கு நேரில் சென்று எடுத்து வந்தனர். வாகனங்களில் நேரடியாக சென்று வழங்கப்படாததால், அரசு வழங்கிய தொகையினை அந்தந்த பள்ளி நிர்வாகத்திற்கு வழங்குவார்கள் என நினைத்த பள்ளி நிர்வாகத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

                      சில வாரங்களுக்கு முன்னதாக சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு அரசு வழங்கிய 50 ரூபாய் பணத்தில் முறைகேடு நடந்ததாக ஆசிரியர்கள் புலம்பினர். இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் செயல் வழி கற்றல் அட்டைகள் வழங்கிட தமிழக அரசு ஒதுக்கிய வாகன வாடகை தொகையிலும் முறைகேடு செய்திருப்பது ஆசிரியர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
 
                     தமிழக அரசு செயல்வழிக்கற்றல் உள்ளிட்ட சிறப்பு பயிற்சியினை மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்று, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறது. இருப்பினும் சில அதிகாரிகளின் செயலால் மொத்த திட்டமும் வீணாகும் நிலை உள்ளது. இதனை உணர்ந்து அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நடைபெறும் தவறுகளை களைய தனிக்குழு அமைத்து கண்காணித்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior