சிறுபாக்கம்:
சிறுபாக்கம் அருகே துல்லிய பண்ணை மருத்துவ பயிர்களை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆய்வு செய்தார். சிறுபாக்கம் அடுத்த அடரிகளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராசு தனது வயலில் செல்போன் மூலம் இயங்கக்கூடிய உயர் ரக தொழில் நுட்ப சொட்டு நீர் பாசனம் அமைத்து மூங்கில் பயிரிட்டுள்ளார். இதனை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் முருகேசபூபதி நேற்று பார்வையிட்டார்.அதுபோல் விவசாயி கருணாமூர்த்தி வயலில் பயிரிடப்பட்டுள்ள கோலியஸ் மருத்துவ பயிரினையும் பார்வையிட்டு விவசாயிக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
விவசாயிகளின் முயற்சிகளை பாராட்டிய துணைவேந்தர், தொடர்ந்து விவசாயிகளிடம் நீர் சிக்கனத்தின் முக்கியத்துவம் குறித்தும், இஸ்ரேல் போன்ற நாடுகளில் கடைபிடிக்கப்படும் நீர் சிக்கன முறைகள் மற்றும் நீர் வழி உர நிர்வாகம் குறித்து விளக்கினார்.ஆய்வின் போது வேளாண் பல்கலை கழக விரிவாக்க கல்வி இயக்குனர் கலைசெல்வன், அறிவியல் நிலைய பேராசிரியர் சாத்தையா, உதவி பேராசிரியர் ராஜி, தோட்டக்கலை துணை இயக்குனர் முகமதுயாஜி, உதவி இயக்குனர்கள் முருகன், ரமணன், அலுவலர்கள் கோவிந்தராசு, தர்மலிங்கம் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக