உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

கடல் மிதந்த பல கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் கழிவு

சிதம்பரம்:
 
                      சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பம் கடலில் மீன்பிடிக்கும் போது பல கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் கழிவு பொருளான ஆம்பர்கிரிஸ் என்ற மிதவைகளை மீனவர்கள் கைப்பற்றி போலீஸôரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பம் கடலில் செவ்வாய்க்கிழமை 30 கி.மீ. தூரத்தில் வேலு உள்ளிட்ட 7 பேர் படகில் மீன் பிடித்தனர். அப்போது அங்கு புதுமையாக மிதந்து வந்த மிதவையை கைப்பற்றி கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.இது குறித்து பரங்கிப்பேட்டை போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் புகழேந்தி அதை பார்வையிட்டு மீன்வளத் துறையினர் மற்றும் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்துக்கும் தகவல் அளித்தார். மீன்வளத்துறை ஆய்வாளர் நாபிராஜன், கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநர் டி,பாலசுப்பிரமணியன், பேராசிரியர்கள் அஜ்மல்கான், அருளரசன் உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்தனர்.ஆய்வில் திமிங்கலத்தின் அபூர்வமான கழிவுப்பொருள் அது என்றும், அதன் பெயர் ஆம்பர்கிரிஸ். இவை வைரம் மெருகூட்ட பயன்படுத்தப்படும் என்றும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும். இதன் விலை 1 கிராம் ரூ.5 லட்சம் மதிப்பாகும். இந்த கழிவு பல ஆண்டுகளில் கடலுக்கடியில் கிடந்து அபூர்வமாக மேலே வந்து மிதக்கும். இவை கடலில் கிடைப்பது மிக அபூர்வம் என தெரிவித்தனர்.அதன்படி கைப்பற்றப்பட்ட 750 கிராம் திமிங்கலத்தின் கழிவுபொருள் ஆய்வுக்காக சென்னை மீன்வள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior