உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

பண்ருட்டி உழவர் சந்தை முடங்கியது : விவசாயிகள் வருகை இல்லை


பண்ருட்டி: 

                     விவசாயிகள் வருகை இல்லாததால் பண்ருட்டி உழவர் சந்தை, எவருக்கும் பயனின்றி வீணாகி வருகிறது.

                    பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் உழவர்சந்தையை கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி அப்போதைய தமிழக வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திறந்து வைத்தார். உழவர் சந்தை திறந்து மூன்று மாதங்கள் வரை சிறப்பாக செயல்பட்டு வந்தது. பின் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் 2001ம் ஆண்டு முதல் மூடப்பட்டது.

                      பின் மீண்டும் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் 3.6.2006ல் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் உழவர் சந்தை திறந்த சில நாட்களில் பொதுமக்கள் வருகை குறைவால் விவசாயிகள் உழவர் சந்தைக்கு தங்கள் விளைபொருட்களை கொண்டு வராமல் தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றதால் உழவர் சந்தை முடங்கியது.

                   ஆனால் தோட்டக் கலை, வேளாண்மை துறை அதிகாரிகள் உழவர் சந்தையில் தினந்தோறும் விவசாய பொருட்கள் வருவதாக மேலதிகாரிகளுக்கு பொய் கணக்கு காண்பித்து வந்தனர். இதுகுறித்து கடந்த ஆண்டு நடந்த தமிழக கலெக்டர்கள் மாநாட் டில் தமிழக முதல்வர் தமிழகத்தில் பண்ருட்டி உழவர்சந்தை தான் செயல்படாமல் உள்ளது என குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

                     இதனையடுத்து அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னு உழவர் சந்தை செயல்பட நகராட்சி கமிஷனர், வேளாண், தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனைக்குழு கண்காணிப்பாளர், டி.எஸ்.பி., உள்ளிட்டோர் கொண்ட குழு மூலம் உழவர் சந்தை செயல்பட நடவடிக்கை மேற்கொண்டார். இக்குழுவினர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை உழவர் சந்தையில் விற்க ஏற்பாடு செய்தனர். அதிகாரிகள், போலீசார் கட்டாய அழைப்பினால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து எடை போட்டு, அதிகாரிகளிடம் கணக்கு காட்டிவிட்டு மீண்டும் பண்ருட்டி மார்க்கெட்டில் விற்பனை செய்தனர்.

                      கடந்த எம்.பி.,தேர்தலுக்கு பின் உழவர்சந்தையில் ராமர்,லட்சுமணன் சகோதரர்கள் மட்டுமே காய்கறி கடை வைத்துள்ளனர். விவசாயிகள் யாரும் விளைபொருட்கள் கொண்டு வருவதில்லை. இதனால் செயல்படாத உழவர்சந்தையாக உள்ளது.பண்ருட்டி சென்னை சாலையில் போக்குவரத் துக்கு இடையூறாக காய்கறிகள் கமிஷன் மண்டி வியாபாரிகள், கும்பகோணம் சாலையில் பலாப்பழம் விற்பவர்கள், அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை கடலூர் சாலையில் நடைபெறும் கொய்யா மார்க்கெட் ஆகியவற்றையாவது உழவர் சந்தையில் செயல் படுத்த அதிகாரிகள் முன் வந்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். விவசாயிகள் கஷ்டப்பட்டு கொண்டு வரும் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்க இயலும்.இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior