பரங்கிப்பேட்டை:
வாய்க்காலில் தரைப் பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை ஊராட்சியின் மேற்கு பகுதியில் 500 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. இந்த விளை நிலங்களுக்கு பாசன வாய்க்கால்களை கடந்து செல்ல வேண்டும். பல ஆண்டாக வாய்க்கால் சிமென்ட் குழாய் மூலம் வழி ஏற்படுத்தி டிராக்டர்கள் செல்லவும், மாட்டு வண்டியில் உரங்களை ஏற்றி செல்லவும், விளைந்த நெல், உளுந்து மூட்டைகளை வெளியில் எடுத்தும் வந்தனர்.
நான்கு ஆண்டிற்கு முன் வாய்க்காலை தூர் வாரும்போது சிமென்ட் குழாய், மணல் மூட்டைகளை அப்புறப்படுத்தி விட்டார்கள். இதனால் டிராக்டர், மாட்டு வண்டிகள் மற்றும் பொதுமக்கள் வாய்க்காலை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப் பட்ட விவசாயிகள், வாய்க் காலில் தரைப்பாலம் அமைத்துதரக்கோரி கலெக்டர் குறைகேட்பு கூட்டத்திலும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் விவசாயிகள் பயன் பெரும் வகையில் பாலம் கட்டிதர பொதுப்பணிதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக