உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

வேப்பூரில் அரசு மருத்துவமனை இருபது கிராம மக்கள் கோரிக்கை

சிறுபாக்கம்: 

                  வேப்பூரில் தரம் வாய்ந்த அரசு மருத்துவமனை அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மையத்தில் வேப்பூர் அமைந்துள்ளது. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

                      வேப்பூரை சுற்றி பூலாம்பாடி, நிராமணி, பெரியநெசலூர், மாளிகைமேடு,  நாரையூர், காட்டுமயிலூர், அரியநாச்சி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட் டோர் தங்களது அன்றாட பணிகளுக்காக வேப்பூர் வந்து செல்ல வேண்டியுள்ளது.தினசரி இரவு, பகலாக தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் பல்வேறு காலங்களில் விபத்துகள் ஏற்பட்டால், அதில் சிக்கியவர்களை மீட்டு விருத்தாசலம், பெரம்பலூர், திட்டக்குடி, உளுந்தூர் பேட்டை பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. சில சமயங்களில் கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. வேப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் நலனை கருதி தரம் வாய்ந்த மருத்துவமனையை அரசு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior