உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்: குறிஞ்சிப்பாடியில் 57 பேர் தேர்வு

குறிஞ்சிப்பாடி: 
 
                        குறிஞ்சிப்பாடியில் நடந்த மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாமை மாவட்ட துணை இயக்குநர் ஆய்வு செய்தார். குறிஞ்சிப்பாடியில் நடந்த மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

                    இதில் 57 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டனர். முகாமை மாவட்ட துணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் கிருஷ்ணராஜ் திடீர் ஆய்வு செய்தார். 
 
மாவட்ட துணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் கிருஷ்ணராஜ் கூறுகையில், 
 
                          மாவட்டத்தில் நடைபெறும் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் உயர் சிகிச்சைக்கு தேர்வு செய் யப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக வருமான சான்றிதழ் வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த சான்றிதழை சுகாதார ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் களை தொடர்பு கொண்டு பெற்றுத்தர வேண்டும். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்தவர்களை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரத்திலிருந்து தலா ஒரு வாகனமும், இயக்குனர் அலுவலகத்திலிருந்து 2 வாகனமும் மொத்தம் 15 வாகனங்களில் நோயாளிகளை அழைத்து சென்று உரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

                    மாநிலத்தில் கொசு ஒழிப்பு திட்டத்திற்காக மாவட்டத்திற்கு ஒரு வட்டாரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் வட்டாரம் தேர்வு செய்து கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது. வரும் 4ம் தேதி காட்டுமன்னார்கோவில் வட்டாரத்தில் 500 கர்ப்பிணி பெண்களுக்கு வளையலணி விழா நடக்கிறது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் மூலமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் நிதி பெற வரும் 5ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்களை அணுகி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார். அப்போது மாவட்ட மலேரியா அலுவலர் பாஸ்கரன், மாவட்ட நலக் கல்வியாளர் ராமமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் லட்சுமி, சுகாதார மேற் பார்வையாளர் சுப்ரமணியன், ஆய்வாளர் பாண்டியராஜன் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior