கடலூர்:
பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் காசநோய் அதிகமாக உள்ளது என கலெக்டர் சீத்தாராமன் பேசினார். உலக காசநோய் தின விழா நேற்று கடலூரில் நடந்தது. மருத்துவப் பணிகள் காசநோய்) துணை இயக்குனர் மனோகரன் வரவேற்றார். கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:
மாவட்டத்தில் 24.5 லட்சம் பேர் உள்ளனர். ஐந்து லட்சம் மக்களுக்கு ஒன்று வீதம் 5 இடங்களில் காசநோய் மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. மேலும் 25 இடங்களில் மைக்ரோ மையமும் செயல்பட்டு வருகின்றன. இவற்றை செயல்படுத்த தேவையான அதிகாரிகள் பணியமர்த் தப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் 40 ஆயிரத்து 127 பேருக்கு காசநோய் சோதனை செய்யப் பட்டது.
தற்போது பொது மக்களிடம் காசநோய் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பில் பரிசோதனை செய்வதோடு தனியார் மருத்துவமனைகளும், தொண்டு நிறுவனங் களும் இதில் ஈடுபட்டுள் ளன. கடந்த 7 ஆண்டுகளாக காசநோய் தடுப்பில் தொடர்ந்து நமது மாவட் டம் பாராட்டுதலையும் பரிசுகளையும் பெற்று வருகிறது. காச நோய் உறுதி செய்யப்பட்ட 14000 பேரில் 12380 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். மீதியுள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 4 ஆண்டுகளில் காசநோயை ஒழித்துவிடலாம். பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் காசநோய் அதிகமாக உள்ளது. நோய்க்கான காரணிகளை கண்டறிந்து தடுக்க வேண்டும். நகரம் தூய்மையாக இல்லாததால் புழுதி பறந்து நோயை உண்டாக்குகிறது. இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் பேசினார் .நலப்பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார், துணை இயக்குனர் பரஞ்ஜோதி உட்பட பலர் பேசினர். டாக்டர்கள் மகாலிங்கம், கோவிந்தராஜன், கலைமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக