உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

பல்கலை. மாணவர்கள் மூவர் சாவு: மாவட்ட வருவாய் அலுவலர் 2-ம் கட்ட பொது விசாரணை


சிதம்பரம்:
 
                  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தலைமையில் 2-ம் கட்ட பொது விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. 
 
                    அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல மாணவர் கவுதம்குமார் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி விபத்தில் இறந்ததை அடுத்து பல்கலையில் பயிலும் வடமாநில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு பல்கலைக்கழக கட்டடங்கள், பல்கலை. வேன் மற்றும் ஆட்டோக்களை சேதப்படுத்தினர். இச்சம்பவத்தின் போது போலீஸôர் மாணவர்களை விரட்டியடித்த போது 3 பொறியியல் புல மாணவர்கள் முத்தையாநகர் அருகே உள்ள பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தனர். இச்சம்பவம் குறித்து தமிழக அரசு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் மார்ச் 5-ம் தேதி முதல் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தார். 
 
                          சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் கட்ட பொது விசாரணை நடத்தினார். இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை 2-ம் கட்ட பொது விசாரணையை நடத்தினார். அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் மற்றும் அருந்ததியினர் சங்கத்தினர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையின் போது தமிழக ஜார்க்கண்ட் முக்தி மோட்சா தலைவர் எம்.ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அடுத்த கட்ட பொது விசாரணை மார்ச் 31-ம் தேதி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior