ராமநத்தம்:
பல ஆண்டாக புதர் மண்டியிருந்த தச்சூர்-லக்கூர் மண் சாலை தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. ராமநத்தம் அடுத்த தச்சூர்-லக்கூர் இடையேயான 3.5 கி.மீ., மண் சாலை 20 ஆண்டாக சீரமைக்கப்படாமல் புதர் மண்டியதால், பொதுமக்கள் அருகில் உள்ள விளை நிலத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து குறுகலான பாதை சுமார் 22 அடி அகலத்திற்கு விவசாய பொருட்களை ஏற்றி வரும் வகையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் உள்ளூரை சேர்ந்த 150 பேர் ஈடுபட்டுள்ளனர். பணியை ஊராட்சி தலைவர் சந்திரா, துணை தலைவர் விஜயலட்சுமி, உறுப்பினர்கள் கொளஞ்சியம்மாள், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக