கிள்ளை :
சிதம்பரம் அடுத்த கிள்ளை எடப்பாளையம் மற்றும் நெடுஞ்சியில் காசா தொண்டு நிறுவனம் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட 138 பயனாளிகளுக்கு தலா 3 லட்சம் ரூபாய் செலவில் 4 கோடியே 14 லட்சம் செலவில் கட்டப்பட்ட வீடுகள் திறப்பு விழா நடந்தது.
சிதம்பரம் அடுத்த கிள்ளை எடப்பாளையத்தில் சுனாமியால் பாதிக் கப்பட்டவர்களுக்கு காசா தொண்டு நிறுவனம் சார்பில் தலா 3 லட்சம் செலவில் 93 கான்கிரீட் வீடுகள் 2 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்டது. காசா ஒருங்கிணைப் பாளர் ராஜ்குமார் வரவேற்றார். முதன்மை அலுவலர் ஷீலா ஜோன்ஸ், நிர் வாக இயக்குனர் சுசன்அகர்வால், நிர்வாக அலுவலர் நிர்மலா சிங் ஆகியோர் புதிய வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு சாவி மற்றும் இன்சூரன்ஸ் பத்திரங்களை வழங்கினர். சிதம்பரம் தாசில்தார் காமராஜ், தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, கிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் வில்சன் தன்ராஜ், கிள்ளை தர்கா முத்தவல்வி வஜ்ஜூன் சத்தாரி, பரங்கிப்பேட்டை ஏ.ஏல்.சி., போதகர் சாக்ரட்டீஸ் மற்றும் கிள்ளை எடப்பாளையம் கிராம மக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக நஞ்சைமகத்துவாழ்க்கை ஊராட்சி நெடுஞ்சியில் 45பயனாளிகளுக்கு ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகளை திறந்து வைத்து அதற்கான சாவிகளை பரங்கிப்பேட்டை சேர்மன் முத்து பெருமாள், ஊராட்சித் தலைவர் தனசேகரன் முன்னிலையில் வழங்கப்பட்டது. காசா நிறுவன இன்ஜினியர் ஜஸ்வா நன்றி கூறினார்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக