சிதம்பரம்:
விலைவாசி உயர்வை கண்டித்து ஏப்ரல் 27 (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அக் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் மலேசியாவிலிருந்து சிகிச்சைக்காக இந்தியா வந்தபோது அவருக்கு சிகிச்சை அளிக்க உதவாமல் திரும்பி அனுப்பிய சம்பவத்தை கண்டிப்பது, மின்வெட்டை தடுக்கும் பொருட்டு மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்க வழி செய்ய தமிழக அரசை கேட்டுக் கொள்வது, கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கணக்கெடுப்பின் பணியின் போது பயனாளிகள் அலைகழிக்கப்படுகிறார்கள். பாரபட்சமின்றி அனைத்து குடிசை வீடுகளுக்கும் வீடு கட்டிக் கொடுக்க இக் கூட்டம் முதல்வரை கேட்டுக் கொள்கிறது. மாநிலத் தலைவர் ஏ.எஸ்.லோகநாதன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர்.காளிமுத்து, செயற்குழு உறுப்பினர் டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இளைஞரணி செயலாளர் சண்முகம், மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், மாவட்டத் தலைவர் பன்னீர், மாவட்ட அமைப்பாளர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் ஒன்றியச் செயலர் வீராசாமி நன்றி கூறினார்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக