உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

சமூக அமைப்பையே மாற்ற வேண்டும்: தா.பாண்டியன்

 சிதம்பரம்:

           சாதி உணர்வை சட்டத்தால் மாற்ற முடியாது. அதற்கு சமூக அமைப்பையே மாற்றி அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

           சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் தெருவில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் சாதி மறுப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநில சிறப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. 

மாநாட்டில் தா.பாண்டியன் பேசியது: 

              இந்தியாவில் பிறப்பு, இறப்பு வரை சாதி யாரையும் விடாது. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சாதியில் பிறக்கிறோம். இந்து மதம் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்து மதத்தினர் கிறிஸ்தவம், இஸ்லாமிய மதங்களுக்கு மாறலாம். ஆனால் சாதி மாற முடியாது. தமிழகத்தில் 6,7 முக்கிய சாதிகள் உள்ளன. இதில் பிராமணப் பெண்கள்தான் அதிகம் பேர் வரதட்சிணை காரணமாக காதலித்து கலப்பு திருமணம் செய்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

                 இதில் முரட்டு சாதியினர் கலப்பு திருமணத்தை ஏற்காமல் அத்தம்பதிகளை வெட்டிக் கொலை செய்து வரும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால்தான் பிராமணப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட அம்பேத்கருக்கு எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. பட்டியல் சாதியினர் தமிழகத்தில் மொத்தம் 76 பிரிவுகள் உள்ளன. மண்டல் கமிஷன் அறிக்கைப்படி இந்தியாவில் 6,400 பிரிவுகள் உள்ளன. சிக்கலும், பின்னலுமாக உள்ள இதைக் களைந்து அவர்களை மனிதனாக உருவாக்க வேண்டும் என தா.பாண்டியன் தெரிவித்தார்.
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு : 

               "தீண்டாமை, சத்திரியன்' என்ற இரு புத்தகங்கள் எழுதியுள்ளார் அம்பேத்கர். தீண்டாமை குறித்து எழுதியபோது ரவிதாஸ் மற்றும் நந்தனாரைப் பற்றி சொல்லியுள்ளார். நந்தனாரை அக்னிப்பிரவேசம் செய்து தீட்சை பெற்றதாக மோசடி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். தீண்டாமையைச் சமுதாயம் தானாக மாற்றாது, நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் மாற்ற முடியும். 1968-க்கு முன்பு அடிமைத்தன தொழிலாளி முறையினால் குறைந்து கூலி கொடுக்கப்பட்டு வந்தது. அதற்காக 1968-ல் கிசான் சபா என்ற விவசாயத் தொழிலாளர் அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் முதல் மாநிலச் செயலராக தேர்வு செய்யப்பட்டேன். கிசான் சபா மூலம் கூலி உயர்வுக்காகப் போராடி வெற்றி பெற்றோம். தொடர்ந்து போராடி வருகிறோம். இன்றுள்ள நிலை சுதந்திரப் போராட்டத்துக்கு முன்பு கிடையாது.÷சுதந்திரத்திற்கு முன்பு அனைவருக்கும் வாக்குரிமை கிடையாது. நிலம் வைத்திருப்பவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்களுக்குத்தான் உண்டு. 100 சதவீதத்தில் 10 சதவீதத்தினருக்குதான் வாக்குரிமை உண்டு. சுதந்திரத்துக்குப் பிறகுதான் அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்தது.  தீண்டாமை என்பது மனித உரிமை மீறல். தலித் மக்கள் தனித்து நின்று போராட முடியாது. போராடினால் வெற்றி பெற முடியாது. அதற்கு அணி சேர்த்துப் போராட வேண்டும். அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும். இன்னும் தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறை, ஆலய நுழைவு எதிர்ப்பு போன்றவை உள்ளன. இதை எதிர்த்துப் போராட அணி சேர்க்க வேண்டும் என ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. : 

              தமிழகத்தில் சிதம்பரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தீண்டாமையினால்  நந்தனார், வள்ளலார் எரித்துக் கொல்லப்பட்டனர். எல்லோரும் கடவுள் முன்பும், ஆட்சி முன்பும் சமம் இல்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில் சாதி, ஆதிக்க சக்தியாக உள்ளது. இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சாதி வித்தியாசம் உள்ளது. சாதிப் பிரச்னை தென்ஆசிய நாடுகளில்தான் உள்ளது. இதை மாற்றி அமைக்க அணி திரண்டு போராட வேண்டும் என்றார். மாநாட்டுக் குழுத் தலைவர் டி.மணிவாசகம் வரவேற்றார். செயலாளர் எம்.சேகர் நன்றி கூறினார். த.ஸ்டாலின் குணசேகரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.÷நந்தன் நுழைந்த நடராஜர் கோயில் தெற்கு வாயிலை திறக்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியைச் சேர்ந்த 207 பேரை இடஒதுக்கீடு முறையில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும்.÷பட்டியல் சாதியினர், பழங்குடியினர் சமூக மக்களுக்கு நில உரிமையை பாதுகாக்கும் வகையில் சிறப்பு அதிகாரம் கொண்ட உயர்மட்டக் குழுக்களை மாநில, மாவட்ட அளவில் அமைத்து செயல்படுத்த அரசை கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior