கடலூர் :
கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு 3வது மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். இணை பொதுச் செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மகாவீர்மல் மேத்தா, பரமசிவம் பங்கேற்றனர். பொதுச் செயலாளர் மருதவாணன் விளக்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப் பாதை துவக்க உள்ள நிலையில் திடீரென்று புதிய புதிய கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் முன் வைத்து தாமதப்படுத்தாமல் ரயில்வே சேவை துவங்கியுள்ள சூழலில் போக்குவரத்து நெரிசலால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை தடுத்திட உடனடியாக சுரங்கப்பாதை பணிகள் துவக்கப்பட வேண்டும். மாற்று போக்குவரத்திற்காக ஜவான்ஸ் பவன் இணைப்பு சாலை, செம்மண்டலம், கம்மியம்பேட்டை, ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சரவணா நகர் இணைப்பு சாலை மற்றும் வண்டிப்பாளையம் சாலை உடனடியாக துவங்கப்பட வேண்டும். அலட்சியமாக ஆமை வேகத்தில் நடைபெறும் நெல்லிக்குப்பம் சாலைப் பணிகள் உடனடியாக முடிக்கப்பட்டு சாலையின் நடுவில் கல்லறையில் இருந்து சாவடி வரை தடுப்பு அமைத்து பாதுகாப்பான போக்குவரத்துக்கு உறுதி செய்ய வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக