பண்ருட்டி :
பண்ருட்டியில் வணிக நிறுவனங்கள் வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை அளிக்காததால் தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.
வணிக நிறுவனங்களில் வாரம் ஒரு நாள் விடுமுறை அளித்து தொழிலா ளர்களுக்கு விடுமுறை அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பண்ருட்டி நகரத் தில் உள்ள மளிகை, ஐவுளி, எலக்ட்ரானிக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், அரவை மில்கள், பாத்திரக்கடைகள் வார விடுமுறை விடுவது இல்லை. இதனால் வாரத்திற்கு ஒரு நாள் கூட தொழிலாளர்களுக்கு விடுமுறை கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். சிறுவியாபாரிகள் தங்கள் பொருளாதாரத்தை உயர்த்த வாரத்தின் அனைத்து நாட்களிலும் கடுமையான உழைப்பின் மூலம் வியாபாரம் செய்கின்றனர். ஆனால் நகரில் உள்ள பெரிய வணிக நிறுவனங்கள் கூட ஒரு நாள் விடுமுறை அளிக்காமல் செயல்படுகின்றனர். தொழிலாளர் துறை அலுவலர்களும் பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக சங்க நிர்வாகிகளுடன் இணக்கமான சூழ் நிலை வைத்து 'மாமூல்' பெற்றுக் கொள்வதால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். வணிக நிறுவனங்கள் வார விடுமுறை விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக