உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

சேலம் - விருத்தாசலம் பாசஞ்சர் ரயில் திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வலியுறுத்தல்


கடலூர் : 

           சேலம் - விருத்தாசலம் பாசஞ்சர் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட் டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 
               விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில் ஓடிக்கொண்டிருந்த ரயில்கள் விருத்தாசலத்துடன் நிறுத்தப்பட்டன. விருத்தாசலம் - சேலம் பாசஞ்சர் ரயில் எண். 835 அதிகாலை 5.30 மணிக்கு விருத்தாசலத்தில் புறப்பட்டு 9 மணிக்கு சேலம் சென்றடைகிறது. சேலத்தில் ரயில் எண். 838 இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு விருத்தாசலத்திற்கு நள்ளிரவு 12.55க்கு வந்தடைகிறது. ரயில் எண்.837 மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு 5 மணிக்கு சேலம் சென்றடைகிறது. நள்ளிரவு நேரத்தில் சேலத்தில் இருந்து வரும் வண்டிகள் விருத்தாசலத்திலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. மறுநாள் காலையில்தான் அதே ரயில் மீண்டும் சேலத்திற்கு இயக்கப்படுகிறது. எனவே, விருத்தாசலத்தில் நிறுத்தி வைக்கப்படும்  ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும்.
 
                 அதே போல் கடலூர் துறைமுகம் - திருச்சி பாசஞ்சர் ரயில் எண்.805  காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 9.45 மணிக்கு சென்றடைகிறது. அதே போல் திருச்சியில் ரயில் எண்.806  மதியம் 3.15க்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு வந்தடைகிறது. கடலூர் முதுநகரில் இருந்து அதிகாலையே புறப்படுவதால் திருப்பாதிரிப்புலியூர் மக்கள் ஆட்டோ பிடித்து செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் ரயில் கட்டணம் குறைவாக இருந்தும் ஆட்டோ கட்டணம் அதிகளவில் செலுத்த வேண்டியுள்ளதால் கூடுதல் செலவு பிடிக்கிறது. எனவே சேலம் - விருத்தாசலம், திருச்சி - கடலூர் முதுநகர் வரை இயக்கப்பட்டு வரும் ரயில்களை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior