பண்ருட்டி :
நெல்லிக்குப்பம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் உழவர் அடையாள அட்டை அனைவருக்கும் வழங்குவது குறித்து வி.ஏ.ஓ.க்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தாசில்தார் பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மங்கலம், தனி தாசில்தார் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார்கள் முத்துராமன், நசீர், வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன், வி.ஏ.ஓ.,க் கள் சம்பத், முருகவேல், ஜோதிமணி, சரவணன், சங்கரநாராயணன், வீரராவ், முன்னாள் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் உழவர் அடையாள அட்டை விரைவில் வழங்க வேண்டும். முதியோர் உதவி தொகை, 'கான்கிரீட்' வீடுகள் கணக்கெடுப்பில் தகுதியுள்ளவர்கள் பெயர்களை விடுபடாமல் சேர்க்க வி.ஏ.ஓ.,க்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக