நடுவீரப்பட்டு :
சி.என்.பாளையத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு இடவசதி இல்லாததால் குழந்தைகள் அருகில் உள்ள கோவிலில் படித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சி காலனியில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த மையத்திற்கு கட்டடம் ஏதுமில்லாததால் மாரியம்மன் கோவில் வாசலில் இயங்கி வருகிறது. குழந்தைகளுக்கு மதிய உணவு சமைப்பதற்கான பொருட்கள் அனைத் தும் அருகில் உள்ள 1987ம் ஆண்டு கட்டப் பட்ட ஊராட்சி 'டிவி' அறையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி நடத்த கட்டடம் இல்லாததால் அதன் அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் உட்கார வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். மதிய உணவை வெட்ட வெளியில் மரத்தடியில் சமைத்து வழங்கும் நிலை உள்ளது. மழை காலங்களில் குழந்தைகள் உட்கார இடம் இல்லாமலும்,சமையல் செய்ய கூடாரம் இல்லாமலும் கடும் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் இந்த மையத்திற்கென தனியாக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக