பண்ருட்டி :
பண்ருட்டி நகராட்சி சிறுவர் விளையாட்டு பூங்கா பராமரிப்பு இல்லாமல் பொலிவிழந்து காணப்படுகிறது.
பண்ருட்டி நகராட்சி 26வது வார்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் முன் சிறுவர் விளையாட்டு திடல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கடந்த 4 வருடங்களாக நகராட்சி நிர்வாகம் பராமரிக்கவில்லை. இதனால் பேரிங் ராட்டினம், ஊஞ்சல், சறுக்கு மரம், பேலன்ஸ் வெயிட் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் வீணாகியது. விளையாட்டுத் திடல் தடுப்புக் கட்டைகள், இரும்பு தடுப்பு வேலிகள், அழகு மின் விளக்குகள் ஆகியவற்றை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாலை நேரங்களில் சமூகவிரோதிகள் குடிபோதையில் சிமென்ட் கட்டைகளில் உட்கார்ந்து பள்ளி மாணவிகளை 'ஈவ் டீசிங்' செய்வது தொடர்கிறது. விளையாட்டு திடல், பூங்காவை சீரமைக்காததால் கோடை விடுமுறையில் குதூகலிக்கும் குழந்தைகள் விளையாட முடியாத நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விளையாட்டு திடல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக