நாகப்பட்டினம்:
நாகூரில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முதல் சென்னைக்கு ஓடத்துவங்கியது. விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே அகலரயில் பாதை பணி முடிவடைந்து 23ம் தேதியில் இருந்து ரயில் போக்குவரத்து துவங்கியதையடுத்து,நேற்று முன்தினம் இரவு சென்னை எழும்பூரில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு நேற்று காலை நாகூருக்கு வந்தது. நாகூரில் இருந்து நேற்று இரவு 8.10 மணிக்கு ரயில்(6716) புறப்பட்டு, நாகைக்கு 8.25 மணிக்கு வந்தது. நாகைக்கு வந்த ரயிலை வர்த்தக சங்கத்தினர், ரோட்டரி சங்கம், பொதுமக்கள் உற்சாகத்துடன், பட்டாசு வெடித்து வரவேற்றனர். 8.30 மணிக்கு நாகையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயிலில் ஏராளமான பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக