உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

பாலங்களின் தடுப்பு சுவர்கள் உடைப்பு: விபத்துகள் அதிகரிக்கும் அபாயம்


சேத்தியாத்தோப்பு : 

             அறந்தாங்கியிலிருந்து சோழத்தரம் வரையில் உள்ள பாலங்கள் அனைத்தும் தடுப்புச் சுவர்கள் இடிந்து விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
 
              கடலூர் மாவட்டத்தின் எல்லை காட்டுமன்னார் கோவில் ஒன்றியம் அறந்தாங்கியில் முடிகிறது. அறந்தாங்கியிலிருந்து சோழத்தரம் வரையிலான 5 கி.மீ. தூரத்தில் 6 பாலங்கள் உள்ளன. இவற்றில் அனைத்து பாலங்களின் தடுப்பு சுவர்களும் இடிந்துள்ளது. சென்னை - கும்பகோணம் போக்குவரத்தில் பிரதான நெடுஞ்சாலையாக திகழும் இச்சாலையில் கடந்த ஒரு வருடமாக அணைக்கரை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தற்போது போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. என்றாலும் கூட ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் சுற்றுப் பாதையிலான காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், அணைக்கரை ஆகிய ஊர்களுக்கு இரவும் பகலுமாக ஆயிரக்கணக்கான கார், வேன்களும் 500க்கும் அதிகமான பஸ்களும் இப்பாலங் களை கடந்து செல்கின்றன. இவ்வளவு போக்குவரத்து நிறைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள பாலங்கள் தடுப்பு சுவர்கள் அனைத்தும் உடைந்திருப்பதை ஏனோ அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு உயிர்பலிகள் ஏதும் நிகழும் முன் நெடுஞ்சாலைத்துறையினர் உடைந்த பாலத்தின் மதில் சுவர்களை கட்டி முடிக்க வேண்டும்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior