உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

வறுமையால் பயிற்சியை தொடர முடியாமல் மாணவர்கள் தவிப்பு! : அரசு இசை பள்ளியில் கிராமிய கலைக்கு ஆசிரியர் தேவை

 கடலூர் : 

                கடலூர் அரசு இசை பள்ளியில் கிராமிய கலைகளுக்கு தனியாக ஆசிரியர்களை நியமிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
                தமிழகத்தில் கடலூர், திருவண்ணாமலை, காஞ் சிபுரம், விழுப்புரம், சீர் காழி, திருவாரூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருச்சி, புதுக் கோட்டை, கரூர், ராமநாதபுரம், திருநெல் வேலி, பெரம்பலூர், தூத் துக் குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அரசு இசைப் பள்ளிகள் உள்ளன. கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள அரசு இசைப்பள்ளி கடந்த 1998ம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம் பாடுதல், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட கலைகள் கற்றுத்தரப்படுகிறது. இதில் ஒரு தலைமை ஆசிரியர் உட் பட 9 ஆசிரியர்கள் இசை கற்று கொடுக்கின்றனர். வயலின் ஆசிரியர் பணியிடம் மட்டும் காலியாக உள்ளது.
 
               பாட்டு, பரதநாட்டியம் பயிற்சிகளில் சேர 7ம் வகுப்பு தேர்ச்சியும் மற்ற கலைகளுக்கு எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. மூன்று ஆண்டுகள் நடக்கும் இசை பயிற்சி முடிவில் தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும். இங்கு பயிற்சி பெற்றவர் கள் வெளிநாடுகள் உள்ளிட்ட பல இடங்களில் கச்சேரி நடத்தி பிரபலமாகியுள்ளனர். கடலூர் இசை பள்ளியில் தற்போது 86 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஒரு மாணவர் ஆண் டிற்கு 150 ரூபாய் பயிற்சி கட்டணமாகவும், தேர்வின் போது 200 ரூபாய் கட்டணமாக செலுத்தினாலே போதுமானது. மேலும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், 10 ஆஸ்டல், இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. அதே சமயத்தில் கிராமியக் கலைகளில் தெருக் கூத்து, பம்பை, உடுக்கை, கை சிலம்பு, கரகாட்டம், வில்லுபாட்டு, தாரை-தப்பட்டை, வீதி நாடகங்கள், நையாண்டி, ராஜ கொம்பு உள்ளிட்ட கலைகள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 8,000க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் உள்ளனர். தமிழகத்தில் நடக்கும் விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்துவதில் கடலூர் மாவட்ட கலைஞர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். அதே போல் தமிழகத்தில் நடக்கும் அரசு விழாக்களில் கடலூர் மாவட்ட கிராமிய கலைஞர்கள்தான் அதிகளவில் அழைக்கப்படுகின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த கர்நாடக கவிஞர் சிலை திறப்பு விழாவில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை வரவேற்க ராஜ கொம்பு கலைஞர்கள் கடலூர் மாவட்டத்தில் இருந் துதான் அழைக்கப் பட்டிருந்தனர். ஆனால், இவ்வளவு சிறப்பு மிக்க கிராமிய கலைகளுக்கென்று பயிற்சி அளிக்க கடலூர் அரசு இசை பள்ளியில் தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள இசை பள்ளிகளில்தான் அதிகளவு மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். பயிற்சியின் போது பாதியிலேயே நிற்கும் சூழல் ஏற்படுவதால்  அவர்களது எதிர்காலம் பாதிக் கப்படுகிறது. கடலூர் அரசு இசை பள்ளியில் பயிற்சி பெற வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழ்மையான குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சில மாணவர் களால் குடும்பச் சூழல், வறுமை உள்ளிட்ட பொரு ளாதாரச் சூழல் காரணங் களால் மூன்று ஆண் டுகள் வரை தொடர்ந்து பயிற்சி பெற இயலாமல் பாதியிலேயே நின்று விடும் சூழலும்  ஏற்படுகிறது.
 
                 கிராமிய கலைகளில் சிறந்து விளங்குவது கடலூர் மாவட்டம் என்பதால் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கடலூர் அரசு இசை பள்ளியின் மீது சிறப்பு கவனம் செலுத்தி கிராமிய கலைகளுக்கென்று தனி ஆசிரியரை நியமிக்க ஏற்பாடு செய்வதுடன், இங்கு பயில வரும் மாணவர்களுக்கு போதிய வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்தால் அவர் களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior