உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

தொழிலாளர்களின் உணர்வுகளை என்எல்சி நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்: தொமுச செயலர்

 நெய்வேலி:
              என்.எல்.சி. நிர்வாகம் தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பான தனது நிலையை மாற்றிக்கொண்டு அதை ஏற்படுத்த முன்வரவேண்டும் என தொமுச செயலர் ஆர்.கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
            மத்தியப் பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் 5 ஆயிரம் பொறியாளர்கள்  உட்பட 19 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் பொறியாளர் போக எஞ்சிய 14 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த இரு மாதமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

      தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து தொமுச நிர்வாகக் குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊதிய உயர்வு 40 சதவீதம் வேண்டும் என்றும், சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையப் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 25 சதவீத அலவன்ஸ் உயர்வு வேண்டும் எனவும் முடிவுசெய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து  தொமுச செயலர் ஆர்.கோபாலன் கூறியது: 

          நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அலவன்ஸ் விஷயத்தில் நிர்வாகம் தொடர்ந்து பிடிவாதப்போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே நிர்வாகம் தனது நிலையை மாற்றிக்கொண்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும். இல்லையெனில் போராட்ட நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றார் கோபாலன். உடன் சங்க நிர்வாகிகள் வி.ராமச்சந்திரன், ரகுராமன்,காத்தவராயன் ஆகியோர் இருந்தனர்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior