பண்ருட்டி :
பண்ருட்டியில் புதிதாக துவங்கப்பட உள்ள போக் குவரத்து பிரிவு இன்ஸ் பெக்டராக தணிகாசலம் நேற்று பொறுப்பேற்றார். மாவட்டத்தின் வியாபார மையமான பண்ருட்டியில் கடலூர்- சித்தூர் சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலை ஆகிய இணைந்த நான்குமுனை சந்திப்பு உள்ளது. நகரத்தை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்லாயிரக் கணக்கானோர் தினசரி பண்ருட்டிக்கு வந்து செல் வதால் போக்குவரத்து சீரமைக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இதனால் பண்ருட்டிக்கு தனியாக போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் துவங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டாக பல் வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் எம்.எல்.ஏ., வேல்முருகன் கோரிக்கையின்பேரில் கடந்த பட்ஜெட் கூட்டதொடரில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் பண்ருட்டியில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி பண்ருட்டி போக்குவரத்து பிரிவுக்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்,3 ஏட்டு மற்றும் 10 போலீசார் நியமிக்கப்பட்டனர். முதலில் ஏழு போலீசாரும், சப் இன்ஸ்பெக்டர் பச்சையப் பனும் பொறுப்பேற்றனர். இன்ஸ்பெக்டர் தணிகாசலம் நேற்று பொறுப் பேற்றார். போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அலுவலக மாடியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக