கடலூர் :
கடலூர் பஸ் நிலையத்தில் நிரந்தர கடை கட்டித்தர கோரி நடைபாதை வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு மனு கொடுத்தனர்.
இது குறித்து மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூர் பஸ் நிலையத்தில் கடந்த 40 ஆண்டுகளாக நடை பாதை வியாபரிகள் பழம் மற்றும் பூ வியாபாரம் செய்து வருகின்றோம். பஸ் நிலையத்தில் எங்களுக்கு தனி இடம் ஒதுக்கித் தரக்கோரி கலெக்டர், கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள் ளோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. போலீஸ் மற் றும் நகராட்சி துறையினரால் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனை தடுக்க கோரி மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே நடைபாதை வியாபாரிகள் நலன் கருதி பஸ் நிலையத்தில் நிரந்தர கடை கட்டித் தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக