பரங்கிப்பேட்டை :
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள வேளாண் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் காய்கறிகளை உழவர் சந்தையில் நேரடியாக விற்பனை செய்ய வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜராஜசோழன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சிதம்பரம் உழவர் சந்தை புதுப்பொலிவுடன் செயல்பட தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறி, பழங்கள் மற்றும் கீரை வகைகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யலாம். இதனால் இருதரப்பிலும் முழுமையான பலன் கிடைக்கிறது. உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்ய உழவர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பம் உள்ளவர்களுக்கு புதிய உழவர் அடையாள அட்டைகள் வழங்கப்படும். ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் 50 சதவிதம் மான்ய விலையில் உழவர் சந்தை பெருமக்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக