கிள்ளை :
நஞ்சைமகத்து வாழ்க்கை நடுநிலைப் பள்ளி இரவில் ஆடு, மாடுகளின் தொழுவமாக மாறிவிடுவாதல் ஆசிரியர்கள், மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சிதம்பரம் அடுத்த நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தில் ஆதிதிரவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி உள்ளது. சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த 286 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிக்கு மதிற்சுவர் இல்லாததால் இரவு நேரத்தில் ஆடு, மாடுகள் தங்கும் தொழுவமாக மாறிவிடுகிறது. மேலும் அப்பகுதியினர் பள்ளியை பாராக மாற்றி இரவு நேரங்களில் குடித்துவிட்டு பிளாஸ்டிக் கப், பாட்டில்கள்,சிகரெட் துண்டுகளை பள்ளி வளாகத்திலேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், பள்ளி வளாகத்தில் கிடக்கும் சாணம் மற்றும் மதுபாட்டில்களை சுத்தம் செய்யும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியை நேரில் பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மதிற்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக