உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

கீழ்செருவாயில் சொட்டுநீர் பாசனம் குறித்த செயல்விளக்கம்

திட்டக்குடி :

                  இடைச்செருவாய் கிராமத்தில் கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது, இயந்திரம் மூலம் அறுவடை செய்வது குறித்த செயல் விளக்க கூட்டம் நடந்தது. 
            
                     இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை சார்பில் நடந்த செயல் விளக்க முகாமில் கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது மற்றும் இயந்திரம் மூலம் அறுவடை செய்வது குறித்து படக்காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது. மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

                        முகாமை துவக்கி வைத்த ஆலையின் துணை பொது மேலாளர் (கரும்பு) செந்தில்குமார் பேசுகையில், இந்த ஆண்டு கரும்பு டன் ஒன்றுக்கு ஆயிரத்து 701 ரூபாய் வழங்கப்படுகிறது. அதிக மகசூல் பெற 6 அடி பார் அமைத்து நடவு செய்ய வேண்டும். கரும்பில் களை எடுக்க, மண் அணைக்க மினி டிராக் டர் மற்றும் கரும்பு தோகையை தூளாக்கி மண்ணில் மக்க செய்யும் இயந்திரமும் இந்த ஆண்டு முதல் ஆலை மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  சொட்டு நீர் பாசனம் மற்றும் இயந்திரம் மூலம் அறுவடை செய்வதன் மூலம் கரும்பில் அதிகம் லாபம் ஈட்டலாம் என்றார். கூட்டத்தில் துணை மேலாளர் கார்த்திக்ராஜா, உதவி மேலாளர் சிவனேசன் மற்றும் கரும்பு அலுவலர் கார்த்திகேயன், ரெங்கராஜன், சுந்தர் ராஜன், கிருஷ்ணசாமி, புகழேந்தி, நாராயணன்நேரு, செந்தில்குமார், கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். கரும்பு ஆய்வாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார். இதேபோல ஆதமங்கலம், பெண் ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்திலும் செயல்விளக்கம் அளிக்கப் பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior