விருத்தாசலம் :
பரவளூரில் கரும்பில் இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்க கூட்டம் நடந்தது.
விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை சார்பில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி கரும்பு சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்க கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் குமுதா தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள் சுப்ரமணியன், ஆறுமுகம், முன்னிலை வகித்தனர். விவசாய சங்க நிர்வாகி வெங்கடேசன் வரவேற்றார்.
சர்க்கரை ஆலை உதவி பொது மேலாளர் பஞ்சாபகேசன், உதவி கரும்பு மேலாளர் வடிவேல் நவீன இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் பெறுவது குறித்தும் படக்காட்சிகளுடன் விளக்கினர். முன்னோடி விவசாயிகள் திருமூர்த்தி, தங்கவேல், ரவி, நாகராஜன் மற்றும் பரவளூர், ரெட்டிக் குப்பம், தொரவளூர், எறுக்கன்குப்பம் உள் ளிட்ட கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக