உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

கோ-ஆப் டெக்ஸ் மண்டல அலுவலக கட்டடம் பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழும் அபாயம்

கடலூர் :

                        கடலூரில் கோ-ஆப் டெக்ஸ் மண்டல அலுவலகம் மற்றும் குடோன் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடலூர் முதுநகர் சாலையில் மோகினி பாலம் அருகே இரண்டு ஏக்கர் பரப்பளவில் கோ-ஆப் டெக்ஸ் மண்டல அலுவலக கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. இக்கட்டடத்தில் கீழ்தளத்தில் ஷோ ரூம், மற்றொரு பக்கத்தில் குடோனும், மேல்தளத் தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.


                      இங்கிருந்து தான் கடலூர், விழுப் புரம் மாவட்டங்களில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு துணிகள் அனுப்பப் பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளும் இங்கிருந்துதான் அனுப்பப் பட்டு வருகின்றன. மெயின் ரோட்டில் இருந்து பார்ப்பதற்கு கட்டடம் அழகாக காட்சியளித்தாலும் கட்டடம் அருகில் வந்தால் நின்று பேசுவதற்கு அச்சப்படும் அளவிற்கு உள்ளது. இக்கட்டடத்தை அதிகாரிகள் சரியாக பராமரிக்காமல் போனதால் அடிப்படையாய் உள்ள பீம்கள் யாவும் செரித்துப்போய் ஆங்காங்கே சிமென்ட் காரை பெயர்ந்து விழுகிறது. மேல்தளத்திற்கு செல்லக்கூடிய மாடிப்படிகள் எப்போது விழுமோ என்கிற நிலையில் மழைநீர் ஒழுகி வெறும் கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளன. இரண்டு ஆண்டிற்கு முன்பு மழை நீர் ஒழுகியதால் இங்குள்ள குடோனில் இருந்த துணிகள் நனைந்து வெயிலில் உலர்த்தப்பட்டன. அப் படி இருந்தும் இதுவரை கட்டடம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இக் கட்டடத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள  துணி வகைகள் வைக்கப் பட்டுள்ளன. அதனால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior