கடலூர் :
மாவட்டத்தில் ஒரு லட் சம் ஏக்கரில் பயிரிடப் பட்டுள்ள "பிபிடி' எனப்படும் "பபட்லால்' நெல் பயிர் கலப்பட விதை நெல் கலந்ததாலும், பருவ நிலை மாற்றத்தாலும் இதுவரை 70 ஆயிரம் ஏக்கர் நெல் பாதிப்படைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள் ளாவிட்டால் அனைத்தும் வைக்கோலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2008-2009ம் ஆண் டில் ஆந்திராவிலிருந்து "பிபிடி' எனப்படும் "பபட் லால்' விதை நெல் ரகம் இறக்குமதி செய்யப் பட்டு கர்நாடகாவில் உள்ள "நேஷனல் சீட் கார்ப் பரேஷனிலிருந்து தமிழகத்திற்கு பெறப்பட்டது. இவ்வகை நெல் விதைகளை கடலூர் மாவட்ட விவசாயிகள் 40 ஆயிரம் ஏக்கர் வரை பயிரிட்டனர். நல்ல விளைச் சல் காரணமாக ஒரு குவிண்டால் 1,400 ரூபாய் வரை விலை போனது. லாபகரமாக இருந்ததால் இந்த ஆண்டு குமராட்சி, காட்டுமன்னார் கோவில், கடலூர், பரங் கிப் பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியங் களில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் "பிபிடி' ரக விதை நெல் பெற்று ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆண்டு பயிரிடப்பட்ட "பிபிடி' ரக நெல்லில் "ஜேஜேஎல்' என்ற ரகம் கலப்படம் ஆகியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக ஒரே வயலில் பயிரிடப்பட்டுள்ள நெல்லில் 135 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்யப்படும் "பிபிடி' ரக நெல்லில் கதிர் வராத நிலையில் 125 நாளில் அறுவடை செய் யப்படும் "ஜேஜேஎல்' முன் கூட்டியே கதிர் வந்து கொண்டிருக்கிறது. ஒரே வயலில் இதுபோன்ற மாற்றத்தை கண்டு விவசாயிகள் என்ன செய்வது என தெரியாமல் குழம்பியுள்ள நிலையில், மேலும் ஒரு பேரிடியாக தற்போது பருவ நிலை மாறி பெய்த மழை காரணமாக பூச்சி தாக்குதல் கடுமையாக உள்ளது. சில தினங்களுக்கு முன் தொடர்ந்து பெய்த மழையில் தண்டுப்புழு தாக்குதல் ஏற்பட்டு அதனை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். தற்போது கதிர் வந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள பயிரில் புகையானும், கதிர் வராத பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. கதிர் வருவதில் வித்தியாசம், புழுக்கள் தாக்குதல் என அடுக்கடுக்கான பாதிப்புகளால் ஏக்கர் ஒன்றுக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செலவு செய்து பூச்சி மருந்து அடித் தும் நோய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பயிரிட்ட ஒரு லட்சம் ஏக்கரில் 70 ஆயிரம் ஏக்கர் வரை பாழாகி வருகிறது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாநில வேளாண் துறை செயலாளருடன் தொடர்பு கொண்டு விவசாயிகளுக்கு தேவையான மருந்தை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூச்சிகளை கட்டுப்படுத்தவும், என்ன மருந்து தேவை என் பதை அறிய விஞ்ஞானிகளைக் கொண்டு முறையான ஆய்வு நடத்த வேண் டும். இல்லையேல் மாவட்டத்தில் பயிரிடப் பட்டுள்ள ஒரு லட்சம் ஏக் கர் நெல் பயிரும் வைக் கோலாக மாறும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் "ஆந்திரா பொன்னி எனப்படும் "பிபிடி' ரகம் கர்நாடகாவில் உள்ள நேஷனல் சீட் கார்ப் பரேஷனிலிருந்து 50 டன் விதை நெல் தருவிக்கப் பட்டது. இதில் 7 டன்னில் "ஜேஜேஎல்' ரகம் கலப்படம் ஆகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விதை நெல் வாங்கும் போது முளைப்புத் திறன் மற்றும் காலவிரயமானதா என்பதை மட்டும் பார்த்து வாங்குவது வழக்கம். முழுமையாக பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட விதை நெல்லைத்தான் வாங்கி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.
இதே நிலை திருவாரூர், நாகை மாவட் டங்களிலும் உள்ளது. கடந்த வாரம் கர்நாடகாவிலிருந்து விஞ் ஞானிகள் ஆய்வு செய்தனர். 10 நாள் வித்தியாசத்தில் வரும் கதிர்களால் பாதிப்பு ஏதும் வராது என தெரிவித்துள்ளனர். சோதனைக்கு மாதிரி எடுத்துச் சென்றுள் ளனர். பூச்சி பாதிப்பு குறித்து விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுத்து வருவதாக" கூறுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக