சிதம்பரம் :
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவின் ஐந்தாம் நாளான நேற்று தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா மற்றும் இரவு வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று தெருவடைச்சான் உற்சவம் நடந் தது. அதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நான்கு வீதிகள் வழியாக சாமி வீதியுலா நடந்தது.
இன்று (28ம் தேதி) யானை வாகனத்திலும், நாளை தங்க கைலாச வாகனம், 8ம் நாள் தங்க ரதம், வெட்டுங்குதிரை உற்சவம் நடக்கிறது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா 31ம் தேதி 9ம் நாள் உற்சவமாக நடக்கிறது. 2010 ஜனவரி புத்தாண்டு அன்று அதிகாலை 4மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந் தருள செய்து மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சி, சிற்சபா ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலாவுடன் ஆருத்ரா தரிசனம், சிற்சபா பிரவேசம் நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக