உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

உலக மக்கள் அனைவருக்கும் மே 01 உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கான்சாகிப் வாய்க்காலில் நகராட்சி கழிவுநீர் கலப்பு: 10 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு

சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி மற்றும் மருத்துவமனைக் கழிவுநீர் கலந்து கறுப்பு நிறமாகக் காட்சியள
சிதம்பரம்:
                 சிதம்பரம் நகரை கடந்து செல்லும் கான்சாகிப் வாய்க்கால் என்னும் பாலமான் ஓடையில் நகராட்சி கழிவுநீர் கலப்பதால் அதை நம்பியுள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் அணைக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கீழணை மதகிலிருந்து உருவாகக்கூடிய கொள்ளிடம் வடக்குராஜன் வாய்க்கால் 45 கி.மீ. காட்டுமன்னார்கோவில் புளியங்குடி வரை அமைந்துள்ளது. புளியங்குடி கோப்பாடி மதகிலிருந்து கான்சாகிப் வாய்க்கால் உருவாகி 41.08 கி.மீ. தூரத்துக்கு வெள்ளாற்றில் வடிகிறது. கான்காகிப் வாய்க்கால் செல்லும் பாதையில் 25.2 கி.மீ. தொலைவில் சிதம்பரம் நகரத்தை கடந்து செல்கிறது.
                   இந்த கான்சாகிப் வாய்க்காலில் சிதம்பரம் நகரில் பாலமான் என்னுமிடத்தில் அரசு மருத்துவமனை கழிவு, நகராட்சி கழிவு நீர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் ஆகியவை கலந்து 15 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீராகதான் உள்ளது.  இக்கால்வாயில் உள்ள 34 மதகுகள் மற்றும் இதர வடிகால்கள் மூலம் 9994 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெருகின்றன. இக்கால்வாயின் முழு நீர்க்கொள்ளளவு 240.89 கனஅடியாகும். இக்கால்வாயில் எண்ணற்ற நிலங்களின் நீர்பிடிப்பு தண்ணீரும், வீராணம் ஏரியின் உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்பட்டு இதில் வந்து சேருகிறது. சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டம் பழுதடைந்துவிட்டதால் பல இடங்களில் புதை சாக்கடை நீர் திறந்தவெளி சாக்கடையில் விடப்பட்டுள்ளன. 
                அந்த கழிவுநீர் பஸ் நிலையத்துக்கு பின்புறம் ஓடும் கான்சாகிப் வாய்க்காலில் கொண்டு விடப்படுகிறது. சிதம்பரம் நகரில் ஏற்கெனவே உள்ள பாதாள சாக்கடைத் திட்டம் பழுதடைந்துவிட்டதால். ரூ.38 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு அனுமதியளித்தது. அனுமதியளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் அந்த பணிக்கான டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை.தொகை குறைவாக உள்ளதால் யாரும் டெண்டர் எடுக்கவில்லை என்பதால் தற்போது அப்பணியை செயல்படுத்த ரூ.42 கோடியாக தொகை உயர்த்தப்பட்டது. அப்படியும் இன்று வரை யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. தற்போது பாதாள சாக்கடை நீர் ஆங்காங்கே திறந்தவெளி வடிகாலில் வெட்டி விடப்பட்டுள்ளன. இந்த புதை சாக்கடை கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை மூலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள கான்சாகிப் வாய்க்காலில் கொண்டுவிடப்பட்டுள்ளன. மேலும் அரசு மருத்துவமனை கழிவுகளும் இந்த கால்வாயில் விடப்படுகிறது. இதனால் கான்சாகிப் வாய்க்கால் கழிவுநீர் குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 75 ஆயிரம் மக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். 
                    மேலும் சிதம்பரம் நகரத்தில் 58 தங்கும் விடுதிகள், 23 திருமண மண்டபங்கள், 27 பெரிய உணவு விடுதிகள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவுநீர் திறந்தவெளி சாக்கடை மூலம் கான்சாகிப் வாய்க்காலில் கலக்கிறது. ஹோட்டல்கள், இறைச்சிக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கான்சாகிப் வாய்க்கால் கரையில் கொட்டப்படுகிறது. சிதம்பரம் நகரின் மேற்கு, தெற்கு திசைகளில் புதிதாக உருவாகியுள்ள நகர்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் கழிவுகள் அனைத்தும் கான்சாகிப் வாய்க்காலில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்டு கீழணை வழியாக கான்சாகிப் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து சம்பா சாகுபடியும், அதன் அறுவடைக்கு பின்னர் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் நவரைப்பட்ட சாகுபடியும் செய்யப்படும். நவரைப்பட்ட சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் குறைந்த அளவு பாசன தண்ணீரோடு சிதம்பரம் நகராட்சி கழிவுநீர் கலந்துவிடுவதால் ஒட்டுமொத்த வாய்க்காலிலும் கழிவுநீர் கறுப்பாக காணப்படுகிறது. இந்த நீரை கொண்டுதான் விவசாயிகள் நவரைப்பட்ட சாகுபடி செய்ய வேண்டிய நிலை உள்ளது என உழவர் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற ஆர்.ஐ., விஏஓவை கொல்ல முயற்சி

 பண்ருட்டி:

                   பண்ருட்டி அருகே மணல் கடத்திய லாரிகளைத் தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது.பண்ருட்டி அருகே கன்டரக்கோட்டை தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தல் நடப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, இன்று அதிகாலை 3 மணிக்கு வட்டாட்சியர் ஆர்.பாபு, வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன், கிராம நிர்வாக அதிகாரி ஜோதிமணி உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்போது மணல் கடத்தி வந்த ஒரு லாரியை விஏஓ ஜோதிமணி தடுக்க முயன்றபோது, அவர் மீது ஏற்றுவது போல் வந்த லாரி, வேகமாகத் தப்பிச் சென்றது.பின்னால் வந்த மற்றொரு லாரியை வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன் உள்ளிட்டோர் மடக்கினர்.  அந்த லாரியில் பூபால சந்திரனை ஏற்றி லாரியை காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லும்படி  ஓட்டுனரிடம் வட்டாட்சியர் கூறியுள்ளார். லாரி எல்.என்.புரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் அந்த லாரியை மடக்க முயன்றிருக்கிறது. பின்னர் ரயில்வே கேட் அருகே லாரியை மடக்கிய காரில் இருந்து இறங்கிய ஓட்டுனர், லாரியின் ஓட்டுனரைக் கீழே தள்ளிவிட்டு பூபால சந்திரனுடன் லாரியைக் கடத்திச் சென்றிருக்கிறார். கும்பகோணம் சாலையிலுள்ள அரசு மருத்துவமனை அருகே லாரி சென்றபோது, பூபால சந்திரனைக் கீழே தள்ளிவிட்டு அந்த மர்மநபர் தப்பிச் சென்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. லாரியில் செல்லும்போது அந்த மர்ம நபர் பூபால சந்திரனைக் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும் தெரிகிறது.இதையடுத்து, மர்மநபர் விட்டுச் சென்ற காரைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டு மூலம் ஓட்டுநர் உரிமம்: அமைச்சர் கே.என். நேரு




               ஸ்மார்ட் கார்டு முறை மூலம், வாகன உரிமம், வாகன பதிவுச் சான்று    (ஆர்.சி.) வழங்கும் நடைமுறை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார். 

                   இந்த ஸ்மார்ட் கார்டு முறை சோதனை அடிப்படையில் கடலூர், சிவகங்கை மற்றும் சென்னை தெற்கு ஆகிய இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று இடங்களில் இந்தத் திட்டம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இதை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த முறை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் உடனடியாக அமலுக்கு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசும் போது, இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

இது குறித்து மைச்சர் கே.என்.நேரு மேலும் கூறியது:  

              வாகனங்களுக்கான பதிவுச் சான்று (ஆர்.சி.) புத்தக வடிவில் பெரிதாக வழங்கப்பட்டு வந்தது. இதைப் பாதுகாத்து வைப்பதில் சிரமமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, பதிவுச் சான்று, சான்றிதழ் வடிவில் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சான்றிதழ் வடிவமும் பெரிதாக இருப்பதால், பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் சிறிய அட்டை வடிவில், ஒரு புறம் புகைப்படத்துடன் கூடிய ஓட்டுநர் உரிமமும், மறுபுறம் வாகனப் பதிவுச் சான்றும் பதிவு செய்து அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. என்னென்ன இருக்கும்? இந்த அட்டையில் "மைக்ரோ சிப்' ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்தச் "சிப்' தான் வாகன உரிமையாளரின் ஜாதகம் அனைத்தையும் தெரிவிக்கும். அதில் வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, வாகனம் எப்போது வாங்கப்பட்டது, உரிமத்தை புதுப்பிக்கும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும். ஸ்மார்ட் கார்டில் உள்ள விவரங்களை தெரிந்து கொள்ளக் கூடிய கையடக்கக் கருவிகளை வாகனத் தணிக்கை அதிகாரிகள் வைத்திருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

தேர்வில் தோல்வி: 674 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம்

 கடலூர்:

                ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் தோல்வி அடைந்ததால், தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டு இருந்த 674 கணினி ஆசிரியர்கள் புதன்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1999 முதல், 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.2,500 ஊதியத்தில் 5 ஆண்டுகளுக்கு நியமித்து இருந்தன. 5 ஆண்டுகள் முடிந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.  அவர்கள் தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதன் அடிப்படையில் அவர்களுக்குத் தனியாக தேர்வு நடத்தி 1,800 கணினி ஆசிரியர்களையும் பணியில் அமர்த்த அரசு உத்தரவிட்டது. அவர்கள் பி.எட். பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்கும் போதே, அவர்களைப் பணி நியமனம் செய்வது சரியல்ல. அவர்களுக்கு பி.எட். கல்வித் தகுதி இல்லை. மேலும் இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படவில்லை என்று பி.எட். பட்டம் பெற்ற கணினி பட்டதாரிகள் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஆனாலும் தேர்வு நடத்தி 50 சதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பணி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால், 1800 பேரும் பணியமர்த்தப்பட்டனர். அவர்களில் 35 சதம் மதிப்பெண்   பெற்றவர்களும் இருந்தனர். எனவே பி.எட். பட்டம் பெற்ற கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் மீண்டும் நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் 50 சதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோருக்கே பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால் 35 சதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பணி வழங்கப்பட்டு இருப்பது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்று என்று நீதிமன்றத்தில் அச்சங்கம் தெரிவித்தது. எனவே 35 முதல் 49 சதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடந்த  இந்தத் தேர்வின் முடிவு, புதன்கிழமை வெளியானது. இதில் தேர்வு எழுதிய 800 பேரில் 126 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். தேர்வில் தோல்வி அடைந்த 674 பேரையும் பணி நீக்கம் செய்து, பள்ளிக் கல்வித்துறை புதன்கிழமை உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் 30 பேர் தேர்வு எழுதியதில் 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வேளாண் கருவிகள்

 கடலூர்:

            திட்டக்குடி வட்டம் நல்லூர் ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வேளாண் கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. நல்லூர் ஒன்றியத்தில் உள்ள 15 டான்வா மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு வயல்களில் களை எடுக்கும் கோனோ வீடர் கருவிகள்,​​ நெல்நடவு செய்யும் மார்கர் கருவிகள் ஆகியவற்றை,​​ கடலூர் மண்டல வேளாண் அலுவலர் கிருஷ்ணராஜ் வழங்கினார்.​ வேளாண் கருவிகளின் மதிப்பு ரூ.1.10 லட்சம். நிகழ்ச்சியில்,​​ வேளாண் உதவி இயக்குநர் அப்பன்ராஜ்,​​ வேளாண் அலுவலர்கள் பரமசிவம்,​​ வெங்கடேசன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்றால் வெளிநடப்பு

பண்ருட்டி: 

                 பண்ருட்டி அடுத்த ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்யப்போவதாக ஒன்றியக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறினர். பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தின் மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவர் கெüரிபாண்டியன் தலைமையில்,​​ துணைத் தலைவர் எம்.சம்மந்தம் முன்னிலையில் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:​​

Read more »

Poll Roll Verification In Cuddalore


CUDDALORE: 

       Officials will soon be making door-to-door verification in regard to addition (Form 6), deletion (Form 7) and alterations (Form 8) in the electoral rolls, according to Collector P. Seetharaman. In a statement released here, the Collector requested people to cooperate with the officials. They should also keep ready two passport size photographs, and age and residential proof of prospective voters.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ரயில்வே கேட்டில் கோளாறு:​ ​கடலூரில் போக்குவரத்து பாதிப்பு

 கடலூர்:

                 கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில் வியாழக்கிழமை மாலை 7-25க்கு திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்தது.​ வண்டி புறப்பட்டுச் சென்றதும் ரயில்வே கேட்டைத் திறக்க முடியாமல் அதில் கோளாறு ஏற்பட்டது.​ இதனால் சுமார் 30 நிமிடம் அந்த மார்க்கத்தில் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் லாரன்ஸ் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டதால்,​​ ரயில்வே கேட் திறந்த பிறகும் நெரில் காரணமாக பொதுமக்கள் அந்தப் பாதையை கடக்க,​​ 20 நிமிடத்துக்கு மேல் ஆயிற்று.​ பஸ் நிலையத்துக்கு உள்ளேயும் பஸ்கள் செல்ல முடியவில்லை.​ பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர்.​ போலீஸôர் வந்து பெரிதும் போராடி நிலைமையை சீராக்க வேண்டியது இருந்தது. காலையில் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இந்த ரயில் நிலையத்தைக் கடக்கும்போதும் லாரன்ஸ் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.​ எனவே இங்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Read more »

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் மே 10ம் தேதி விழா நடத்த முடிவு



              மயிலாடுதுறை- விழுப்புரம் அகல ரயில் பாதையில் முறைப்படி மே 10 ம் தேதி ரயில் போக்குவரத்தை மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்' என, எம்.எல்.ஏ., ராஜகுமார் தெரிவித்தார். விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கிலோ மீட்டர் தூரமிருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையை, 2006ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதே ஆண்டு டிச., 1ம் தேதி இப்பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மயிலாடுதுறை வக்கீல் ராஜேந்திரன் ஐகோர்ட்டில் தொடர்ந்த பொது நல வழக்கு மூலம் கடந்த 23ம் தேதி மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில், மே மாதம் 10ம் தேதி முறைப்படி இப்பாதையில் போக்குவரத்தை ரயில்வே இணையமைச்சர் அகமது தொடங்கி வைக்க உள்ளார். விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ.,க்களும், ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இத்தகவலை மயிலாடுதுறை எம். எல்.ஏ., ராஜகுமார் தெரிவித்தார்.

Read more »

கடலூரில் மின்சாரம் தடை: குடிநீர் விநியோகம் பாதிப்பு

 கடலூர்:

                     மின்தடை காரணமாக கடலூர் நகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. கடலூர் நகருக்கு கேப்பர் மலை துணை மின்நிலையம்,​​ நத்தப்பட்டு துணை மின்நிலையம் ஆகியவற்றில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.​ கேப்பர் மலைப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு கடலூருக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.​ கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக என்று கூறி,​​ புதன்கிழமை காலை 9 முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.​ இத்தகைய மின் துண்டிப்பு அடிக்கடி அறிவிக்கப்படுகிறது.​ ​
                     
                   இதனால் ஆழ்குழாய்க் கிணறுகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இறைக்க முடியாமல் போய்விட்டது.​ எனவே புதன்கிழமை நகரில் பல இடங்களில் குடிநீர் விநியோகிக்கப் படவில்லை.​ இருக்கிற தண்ணீரை ஆங்காங்கே பிரித்து வழங்கினர்.​ பல இடங்களில் குறைந்த நேரமே தண்ணீர் விநியோகம் இருந்தது.​ இதனால் லாரிகளில் தண்ணீர் விநியோகிப்போரை நகரில் பல இடங்களில் பார்க்க முடிந்தது.​ ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் ​ குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளில் கோடைக்கால வறட்சி காரணாக நிலத்தடி நீர் மட்டம் கீழே போகும் நிலையில் மின்சார விநியோகமும் தடைபடுவதால்,​​ மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் குடிநீருக்கு அவதிப்படும் நிலை உருவாகி வருகிறது.

Read more »

நில ஆர்ஜிதப் பணிகள் அவசியமானவை


நெய்வேலி:

               நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மின்சாரம் தயாரிக்கின்ற தலையாய பணியைச் செய்து,​​ கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு ஒளி வீசி வருகிறது.​ எனவே மின்சாரத்தை தயாரிக்கவும் அதற்கு தேவையான பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுக்கவும் நிலம் கையகப்படுத்துவது அவசியமானது என்றார் கடலூர் மாவட்ட ஆட்சியர் சீதாராமன். கடலூர் மாவட்ட கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட உய்யக்கொண்டராவி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.​ இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் 172 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி,​​ பின்னர் அப்பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசியது:​ இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க என்எல்சியின் சுற்றுப்புற மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி,​​ கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்,​​ மேலும் சுரங்கப் பணிகளால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தீர்வு காணப்படும்.​ கோட்டகம்,​​ உய்யக்கொண்டராவி பகுதியில் மயானக்கொல்லை அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து விரைவில் அவை முடித்துத் தரப்படும் என்றார் சீதாராமன்.​ தொடர்ந்து துறைவாரியாக ஒவ்வொரு அலுவலரும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினர்.​ என்எல்சி நிறுவனம் சார்பில் நில எடுப்புத்துறை பொதுமேலாளர் என்.எஸ்.ராமலிங்கம்,​​ நிலம் கொடுத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் செய்து தரப்படும் என்றார். விழாவில் கம்மாபும் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்வராஜ்,​​ கோட்டகம்,​​ சேப்ளாநத்தம்,​​ பெரியாக்குறிச்சி,​​ நெய்வேலி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்,​​ கிராம நிர்வாக அலுவலர்கள்,​​ கிராம மக்கள் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

Read more »

பா.ஜ.க. ​ மாநிலத் தலைவர் நாளை கடலூர் வருகை

 கடலூர்:

                   பா.ஜ.க.​ மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை கடலூர் வருகிறார்.​

​இதுகுறித்து கடலூர் மாவட்ட பா.ஜ.க.​ அமைப்பாளர் க.எழிலரசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​

                     1-5-2010 அன்று சுவாமி சகஜானந்தா நினைவு நாளை முன்னிட்டு கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கடலூருக்கு வருகிறார்.​ அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று,​​ புதன்கிழமை கடலூரில் நடந்த மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.​ ​நிகழ்ச்சியில் காலை 9 மணிக்கு கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ராதாகிருஷ்ணன் மாலை அணிவிக்கிறார்.​ அதைத் தொடர்ந்து இரு சக்கர மோட்டார் வாகனப் பேரணியை அவர் தொடங்கி வைக்கிறார்.​ ​பேரணி கடலூர் முதுநகர்,​​ ஆலப்பாக்கம்,​​ பெரியப்பட்டு,​​ புதுச்சத்திரம்,​​ பு.முட்லூர்,​​ ​ புவனகிரி,​​ கீரப்பாளையம்,​​ சிதம்பரம் வழியாக பகல் 12 மணிக்கு சிதம்பரம் ஓமக்குளத்தைச் சென்றடையும்.​ அங்குள்ள சுவாமி சகஜானந்தா சிலைக்கு ராதாகிருஷ்ணன் மாலை அணிவிக்கிறார்.​ குரு பூஜையில் கலந்துகொள்கிறார்.​ பின்னர் அன்னதானம் வழங்கப்படும்.​ நிகழ்ச்சியில் கட்சியின் மாநில,​​ மாவட்ட,​​ நகர,​​ ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கலைஞர் வீட்டுவசதித் திட்டம் 1.63 லட்சம் வீடுகளில் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு:​ ஆட்சியர் தகவல்

கடலூர்:

              கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 1,63,729 குடிசை வீடுகளில் கணக்கெடுப்புப் பணிகள் இதுவரை நிறைவுபெற்று இருப்பதாக,​​ மாவட்ட ஆட்சிய பெ.சீதாராமன் தெரிவித்தார்.

ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ 

                 கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் குடிசை வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி,​​ 29-3-2010 முதல் நடைபெற்று வருகிறது.​ இதுவரை 1,63,729 குடிசை வீடுகளில் கணக்கெடுப்புப் பணி நிறைவு பெற்று உள்ளது.​ எஞ்சிய கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது.​ ​கணக்கெடுப்பு விவரங்கள் மேலாய்வு அலுவலர்களால் ஆய்வு செய்யும் வேலையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.​ கணக்கெடுப்பின்போது தாற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள்,​​ கால நிலைக்கு ஏற்ப வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் போன்றோர்,​​ கிராம ஊராட்சிகளில் கணக்கெடுப்புப் பணிகள் முடுவதற்குள் வந்து,​​ உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.​ கணக்கெடுப்புக் குழு அதை ஏற்றுக் கொண்டு உரிய விவரங்களை கணக்கெடுப்புப் படிவத்தில் பூர்த்தி செய்வார்கள்.​ மேலாய்வு முடிவடைவதற்கு முன்னதாக உரிய ஆவணங்களுடன் வந்து சமர்ப்பித்தாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள்.​ கணக்கெடுப்புக் குழுவினர் தயாரித்த படிவத்தில் தேவையான திருத்தங்களை இடம்பெறச் செய்வார்கள்.​ 

                  கணக்கெடுப்பின்போது ​ கதவு பூட்டப்பட்டு இருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் மேலாய்வு முடிவுற்ற பின்,​​ மீண்டும் வந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களை,​​ வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தனியாக அளித்து விண்ணப்பிக்கலாம்.​ வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனித்தனியாக ஆய்வு செய்து தகுதி குறித்து முடிவு செய்வார்.​ ​ஊராட்சிகளில் கணக்கெடுப்பின்போது ஆவணங்கள் அளிக்காமல் இருந்தாலும்,​​ பூட்டிய வீடு என்று படிவத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தால் அந்த நபர்,​​ உரிய ஆணங்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 5-5-2010க்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

புதுச்சத்திரத்தில் ரூ.27 லட்சத்தில்போலீஸ் நிலையம் கட்டும் பணி

 பரங்கிப்பேட்டை:

                         புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் ரூ. 27 லட்சத்தில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது.புதுச்சத்திரத்தை சுற்றி 49 கிராமங்களை உள்ளடக்கி கடந்த 1983ம் ஆண்டு போலீஸ் நிலையம் துவங்கப்பட்டது. அன்று முதல் போலீஸ் நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சிறிய இடமான அந்த போலீஸ் நிலையத்தில் குற்றவாளிகளை வைத்து விசாரிக்க போதுமான அளவு இடவசதி இல்லை. பெரும்பாலான போலீசார் வெளியூரில் தங்கியுள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் போது குறித்த நேரத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட் டது. இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து தமிழ் நாடு காவல் வீட்டு வசதி கழகம் சார்பில் புதுச்சத்திரத்தில் புதியதாக போலீஸ் நிலையம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. புதுச்சத்திரம் மெயின்ரோட்டில் 26 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய போலீஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது.

Read more »

வளர்ச்சிப்பணிகள் கலந்தாய்வு

சிறுபாக்கம்:

                     நல்லூர் ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள், ஊராட்சி எழுத்தர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆணையர் ரவிசங்கர்நாத் தலைமை தாங்கினார். திட்ட ஆணையர் சுலோசனா முன்னிலை வகித்தார். துணை ஆணையர் வீரபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளான குளம் தூர்வாருதல், நீர்வரத்து வாய்க்கால் சீரமைத்தல், புதிய குளம் வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்கவும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் பணிகளை தேர்வு செய்தல், பணிகள் நடைபெறாத ஊராட்சிகளில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மங்களூர் ஒன்றியத்தில் சிறந்த மாதிரி தொகுப்பு மையங்கள்- ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா


திட்டக்குடி:

                      மங்களூர் ஒன்றியத்தில் தேசிய பெண்கல்வி திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாதிரி தொகுப்பு மையங்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மங்களூர் ஒன்றியத்திலுள்ள 107 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பெண்கல்வி திட்டத்தின் கீழ் 29 மாதிரி தொகுப்பு மையங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள ஒவ்வொரு மையத்திலிருந்தும் சிறந்த பள்ளி ஒன்றும், சிறந்த ஆசிரியர் ஒருவரும் தேர்வு செய்யப்பட்டு 2010- 11ம் ஆண்டிற்கான எஸ்.எஸ்.ஏ., சார்பில் பரிசு வழங்கும் விழா, நேற்று முன்தினம் மாலை இடைச்செருவாய் வட்டார வளமையத்தில் நடந்தது. ஆசிரிய பயிற்றுனர் இளஞ்செழியன் வரவேற்றார்.

                         தலைமை ஆசிரியர்கள் செல்வராஜ், ஜெயராமன், முல்லையன், ஜெயபால், திருவள்ளுவன், ராதாபாய், ஆசிரியர் வீரமணி வாழ்த்தி பேசினர். விழாவிற்கு வட்டார வளமைய மேற் பார்வையாளர் முருகேசன் தலைமை தாங்கி, பரிசு வழங்கினார். இதில் சிறந்த பள்ளிகளுக்கு 2 ஆயிரம் ரூபாயும், சிறந்த ஆசிரியர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆசிரிய பயிற்றுனர்கள் சிவகுரு, மஞ்சு, ஆனந்தராஜ், பால்தாஸ், பன்னீர் செல்வம், சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரிய பயிற்றுநர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Read more »

சத்துணவு பணியாளர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு


விருத்தாசலம்:

                      முழுநேர பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக நலத்துறை மான்ய கோரிக்கையில் நிறைவேற்றகோரி தமிழ் நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் விஜய பாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:

                   உரிய கல்வித் தகுதியுடன் 1983ம் ஆண்டு பிப்ரவரி முதல் பணியாற்றும் பள்ளி சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து சத்துணவு பணியாளர்களையும் முழுநேர நிரந்தரம் செய்ய வேண்டும். அடிப்படை ஊதிய விகிதம், அகவிலைப்படியுடன் ஓய்வூதியம், அமைப்பாளர் காலி பணியிடங்களில் இளைஞர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, சத்துணவு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் மாற்று திறனாளிகளுக்கு அரசில் நிரந்தர பணி மற்றும் இதர சலுகைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வரும் மே மாதம் 12ம் தேதி நடைபெற உள்ள சமூக நலத்துறை மான்ய கோரிக்கையில் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் மே 1 ம் தேதி முதல் 9ம் தேதி வரை ஒன்றிய தலைநகரங்களில் பிரசார இயக்கம் நடத்துவது எனவும், மே 10ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற அமைச்சருக்கு சேர்மன் மனு


திட்டக்குடி:

                பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை கோரி சேர்மன் அமுதலட்சுமி அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் அளித்துள்ள கோரிக்கை மனு:

                     பெண்ணாடம் பேரூராட்சி பழைய பஸ் நிலையம் அருகில் பொது பாதையை கணபதி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அனுமதி பெறாமல் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுகிறார். ஆத்திரமடைந்த மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் சுவற்றை இடித்தனர். இது குறித்து கணபதி அளித்த புகாரின்படி, பேரூராட்சி சேர்மன், கவுன்சிலர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் 4 பேர் உட்பட 19 பேர் மீது ஜாமீனில் வர முடியாத அளவிற்கு வழக்கு பதிந்தனர். பின் ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றோம். இந்நிலையில் வருவாய்த்துறை ஆவணங்களை பரிசீலித்த தாசில்தார், பொது சந்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமானது என கு.வி.மு.ச. பிரிவு 145 உத்தரவு பிறப்பித்துள்ளார்.

                     அதையும் மீறி கட்டடம் கட்டத் துவங்கிய கணபதி மீது பொதுமக்கள் சார்பாக பிரதிநிதித்துவ முறையில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற் றுள்ளனர். ஆனால் பேரூராட்சி வடிகாலை இடித்துவிட்டு கட்டடம் கட்டப்படுகிறது. திட்டக்குடி தாசில்தார் மற்றும் கோர்ட் உத்தரவுகளை மீறி கட்டடம் கட்டி வருகிறார். பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பொது சந்தை ஆக்கிரமிப்பு செய்வதை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தி, பேரூராட்சி வடிகாலை இடித்த கணபதி மீது வழக்கு பதிந்து கைது செய்யவும், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசாருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி


கடலூர்:

                    மோட்டார் பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் இறந்தார். கடலூர் கம்மியம்பேட்டையில் வசித்தவர் எலட்ரீஷியன் ராஜேந்திரன் (48). இவர், நேற்று இரவு 8.30 மணியளவில் போடி செட்டித்தெருவில் வசிக்கும் செல்வம் வீட்டில் மின் மோட்டார் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சிதம்பரம் போலீஸ் நிலையத்தைகண்ணங்குடி கிராம மக்கள் முற்றுகை


சிதம்பரம்:

                     சிதம்பரம் போலீஸ் நிலையத்தை கண்ணங்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் பிரம்மராயர் கோவில் தெரு ராஜேஷ் (18). கவுதமன்(36). நண்பர் களான இருவரும் பைக் கில் சென்ற போது, சின்னக்கடை தெருவில் நின்றிருந்த கண்ணங்குடி சிவக்குமார் வழி மறித்து தன்னை தாக்கியதாக ராஜேஷ் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் சிவக்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். தகவலறிந்த கண்ணங்குடி கிராமத்தினர் சிலர், முன் விரோதம் காரணமாக பொய் புகாரின் பேரில் போலீசார் சிவக்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதாக கூறி அப்பகுதியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வியாழன், ஏப்ரல் 29, 2010

கடலூர் மாவட்ட மக்களை வஞ்சிக்கும் ரயில்வே


கடலூர்:
 
               மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே அகல ரயில்பாதைத் திட்டமானாலும் அதன்பிறகு ரயில்கள் இயக்கம் ஆனாலும், ரயில்வே துறையின் செயல்பாடுகள் கடலூர் மாவட்ட மக்களைப் புறக்கணிப்பதாக அமைந்துள்ளது. 
 
                   மயிலாடுதுறை- விழுப்புரம் மார்க்கத்தில் 122 கி.மீ. நீள அகலப் பாதை அமைப்பதற்காக 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2007 ஜனவரியில் தொடங்கி 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று அறிவித்த இந்தத் திட்டம், மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஏப்ரல் மாதத்தில்தான் பணிகள் முடிவடைந்து இருப்பதாக ரயில்வே தெரிவிக்கிறது. 2007-ல் திட்டம் தொடங்கும்போது ரூ. 198 கோடியில் திட்டத்தை நிறைவேற்றுவதாக அறிவித்து, தற்போது ரூ. 400 கோடிக்கு மேல் செலவாகி இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.ரயில்களை இயக்குவதற்கு ஏற்றவகையில் பணிகள் நிறைவுற்று இருப்பதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒரு மாதத்துக்கு முன் அறிவித்து விட்டார். இன்னமும் 25 சதவீத பணிகள் முடிவடையவில்லை என்கிறார்கள் ரயில்நிலைய அதிகாரிகள். ரயில்கள் இயக்கமும்கூட வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஏப்ரல் 23-ம் தேதிக்குள் ரயில்களை இயக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் காரணமாகவே ரயில்வே இலாகா அவசர அவசரமாக  விழா எதுவும் இல்லாமல் ரயில் 23-ம் தேதி பாசஞ்சர் ரயில் ஒன்றை இயக்கியது. 
 
                    ரயில்நிலைய அதிகாரி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். அகலரயில் பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று, மக்களும் பொதுநல அமைப்புகளும் போராட்டங்களை நடத்தின. அப்போதெல்லாம் அதற்காக துரும்பைக்கூட தூக்கிப்போடாத அரசியல் தலைவர்கள் எல்லாம், சிறப்பாகப் போஸ் கொடுத்து செய்தித் தாள்களில், தொலைக் காட்சிகளில் காட்சியளிக்கும், நல்லதொரு விழா கைநழுவிப் போனதே   என்ற அங்கலாய்ப்பில் உள்ளனராம். விழா ஏன் நடத்தவில்லை என்று ரயில்வே இலாகா அதிகாரிகளைக் கேட்டு நச்சரிக்கிறார்களாம்.அகலப் பாதை திறக்கப்பட்டு, இரு பாசஞ்சர் ரயில்களும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கியதுதான் மிச்சம், மக்களுக்கான குறைந்தபட்ச வசதிகள்கூட ரயில் நிலையங்களில் இல்லை என்பதற்காக, யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. பல ரயில் நிலையங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லை. கழிப்பறை இல்லை. மூன்றரை ஆண்டாக இதைக்கூட ஆர்.வி.என்.எல். நிர்வாகம் ஏன் செய்யவில்லை என்று கேட்பதற்கும் ஆளில்லை. 
 
                     பணிகளை முடித்து ரயில்வேயிடம்  ஒப்படைத்து விட்டதாம் ஆர்விஎன்எல். இந்நிலையில் ரயில் நிலையங்களில் பணியாற்ற போதிய ஊழியர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை.இந்த மார்க்கத்தில் பகல் நேரத்தில் இயக்கப்படும் ஒரே ரயிலான திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் திங்கள்கிழமை முதல் இயக்கப்படுகிறது. ஆனால் இது கடலூர், திருப்பாப்புலியூர், பண்ருட்டி, தாம்பரம் ரயில் நிலையங்களில் நிற்காது என்று ரயில்வே அறிவித்து இருப்பது வியப்பாக உள்ளது. இது கடலூர் மாவட்ட மக்களுக்காக விடப்பட்ட ரயிலாகத் தெரியவில்லை என்கிறார்கள் மக்கள்.இந்த ரயில் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்கும். ஆனால் கடலூர் நகரின் பெரும்பகுதி மக்கள் ரூ. 100 ஆட்டோவுக்குக் கொடுத்து இந்த ரயில் நிலையம் செல்ல வேண்டும்.கடலூரில் இருந்து பஸ்களில் சென்னை செல்வோரில் 80 சதவீதம் பேர்  தாம்பரத்தில் இறங்கி விடுவர். ஆனால் கடலூரில் இருந்து சென்னை செல்லும் ரயில் தாம்பரத்தில் நிற்காது. ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள், புகழ்மிக்க  பாடலீஸ்வரர் கோயில், திருவந்திபுரம் தேவநாதசாமி கோயில் ஆகியவற்றுக்கு இறங்கிச் செல்லும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில், சோழன் எக்ஸ்பிரஸ்  நிற்காது என்றால், இது யாருக்காக விடப்பட்ட ரயில்? மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே விடப்பட்ட பாசஞ்சர் ரயில்கள் எல்லாம் மாணவர்களுக்காகவும் அலுவலகம் செல்வோருக்காகவும் விடப்பட்டவை. 
 
                    ஆனால் தற்போது இயக்கப்படும் இரு பாஞ்சர் ரயில்களும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் அலுவலகங்கள் செல்வோருக்கும் வசதியாக இல்லை என்கிறார்கள். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ரயில்கள் இல்லாததால், தனியார் மற்றும் அரசு பஸ்களுக்கு கிடைத்து வந்த அபரிமிதமான வருவாய், ரயில் விடப்பட்டும் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக யாரோ நிகழ்த்தி இருக்கும் சதித் திட்டத்தின் விளைவே, இத்தகைய மக்களுக்கு எதிரான காலஅட்டவணை என்கிறார்கள் பொதுமக்கள்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வெள்ளரி ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் லாபம்


பண்ருட்டி:
 
              ஒரு கிலோ வெள்ளரி விதை ரூ.100 வரை விலை போவதால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நிகர லாபம் கிடைப்பதாக வெள்ளரி சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். பண்ருட்டி வட்டத்தில் சிறுவத்தூர், வையாபுரிபட்டணம், ஏரிப்பாளையம், அங்குசெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. வெள்ளரி பிஞ்சுகள் பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடப்படுகிறது. இதன் பழங்களை நேரடியாகவும், சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றுடன் கலந்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். பிஞ்சாகவும், பழமாகவும் பயன்படும் வெள்ளரி கோடைக் காலத்துக்கு ஏற்ற மருத்துவ குணம் கொண்ட சிறந்த உணவாகும்.பண்ருட்டி பகுதி விவசாயிகள் விதை எடுப்பதற்காகவே வெள்ளரி சாகுபடி செய்கின்றனர். 
 
இது குறித்து சிறுவத்தூர் வெள்ளரி விவசாயி தியாகராஜன் கூறியது: 
 
                  வெள்ளரி 3 மாத பயிர். வெள்ளரி பிஞ்சுகளை அறுவடை செய்வதில்லை. வெள்ளரி பழத்தில் உள்ள விதைதான் எங்கள் முக்கிய இலக்கு. இந்த விதைகளை சுத்தம் செய்து இனிப்பு மற்றும் பாக்கு கலவையில் பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் விதைகளை தண்ணீரில் அலசி காயவைத்து வைத்தால் வியாபாரிகள் வீட்டில் வந்தே வாங்கி செல்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 150 கிலோ விதை கிடைக்கும். விதை விற்பனை மூலம் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நிகர லாபம் கிடைக்கிறது.விதை நீக்கப்பட்ட வெள்ளரிப் பழம் ஒன்று ரூ. 2 முதல் 4 வரை விலை போகும். இதை வெள்ளரி பழ வியாபாரிகள் தோட்டத்தில் வந்து வாங்கி செல்வர். இல்லை என்றால் தோட்டத்திலேயே போட்டு விடுவோம். பழம் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தோட்ட பராமரிப்பு, மருந்து மற்றும் ஆள் கூலி உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டிவிடும் என்றார் தியாகராஜன்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சீனித்துளசி பயிரிடலாம்; லாபம் பெறலாம்

 சிதம்பரம்:

                இயற்கையின் பலவிதமான அற்புதங்களில் சீனித்துளசி தாவரம் மிகவும் முக்கியமான மருத்துவ தாவரமாக திகழ்கிறது. சீனித்துளசி கரும்பு சர்க்கரையை விட 30 மடங்கு அதிகமாக இனிப்புச் சுவையை கொண்டிருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுவது ஆச்சரியமளிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை உபயோகிக்க முடியாத நிலையில் இந்த சீனித்துளசியிலிருந்து பெறப்படும் சர்க்கரையை உபயோகிக்கலாம். இத்தகைய சீனித்துளசியை விவசாயிகள் வளர்த்தால் தங்களது முதலீட்டைப் போல இருமடங்கு வருமானம் தரக்கூடியதாகும். ஸ்டீவியா எனப்படும் இந்த சிறுசெடி பராகுவே நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும் உலக நாடுகள் பலவற்றிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  தமிழக விவசாயிகள் சீனித்துளசியை விவசாய நிலங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் எளிதாக குறைந்த செலவில் வளர்த்து அதிகளவு லாபம் பெறலாம்.

சாகுபடி குறிப்புகள்: 

              சீனித்துளசி பயிரிடுவதற்கு ஒப்பந்த சாகுபடி முறை மிகவும் பாதுகாப்பானதாகும். சீனித்துளசி ஒரு மித வெப்பமண்டல பயிராகும். நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. உவர்ப்பு தன்மை தாங்கி வளரும் தன்மை இல்லாததால், தண்ணீர் தேங்கியுள்ள விவசாய நிலங்களில், போதிய வடிகால் வசதி இல்லாத நிலங்களில் சீனித்துளசியை சாகுபடி செய்ய முடியாது.விவசாயிகள் நிலத்தை தேர்வு செய்த பின்பு நன்றாக உழுது ஏக்கருக்கு 20 டன்கள் வரை தொழுஉரம் இட்டு மீண்டும் ஒருமுறை நன்றாக உழவும் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேட்டு பாத்திகளில் 23-20 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 44 ஆயிரம் செடிகள் வரை தேவைப்படும். பொதுவாக சீனித்துளசி தண்டுக்குச்சிகள் மூலம் இனம்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 24:12:18 கிலோ என்ற அளவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து இடுதல் வேண்டும். அடியுரமாக பாதியளவும், தழைச்சத்தையும், முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்துகளை பயிருக்கு தர வேண்டும். பின்னர் முதல் அறுவடைக்கு பிந்தைய காலக்கட்டத்தில் மீதிபாதி தழைச்சத்தை நுண்ணூட்ட சத்துக்களான போரான் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றை சேர்த்து வழங்க வேண்டியது அவசியம். சீனித்துளசியின் மகசூலை அதிகரிக்க முதல் களையெடுத்தல் பணிகளை நடவு செய்த ஒரு மாதத்துக்குப் பின்பும், அதன் பின் 20 நாள்களுக்கு ஒரு முறையும் களை நீக்கம் செய்வது பயிரின் வளர்ச்சிக்கு நன்மை தரும்.

                    சீனித்துளசி இலைகளில் ஸ்டீவியோசைடு வேதிப்பொருள் அதிகளவு காணப்படுகிறது. செடிகள் அதிகமாக பூப்பூக்கும் வரை ஸ்டீவியோசைடு இலைகளில் அதிகமாக காணப்படும்.  இலைகளின் வளர்ச்சியை பெருக்க நடவு செய்த பின் 30, 45, 60, 75 மற்றும் 85 நாள்களிலும் மற்றும் அறுவடையின் போது பூக்களை அகற்றிவிடுவது அவசியம்.சீனித்துளசியை அதிகமாக நோய் மற்றும் பூச்சிகள் தாக்குவது கிடையாது. சீனித்துளசியை நடவு செய்த 4,5 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். அடுத்தடுத்த அறுவடைகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை என்று 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்து லாபம் பெறலாம். அறுவடையின்போது அடிபாகத்திலிருந்து 10 செ.மீ. உயரம் வரை விட்டுவிட்டு மேல்பகுதியை வெட்டி எடுக்க வேண்டும். இதன் பிறகு வரும் இலைகள் 3 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். ஏக்கருக்கு ஒரு அறுவடையில் 1 முதல் 1.2 டன்கள் வரை உலர் இலைகளை அறுவடை செய்யலாம். ஆண்டுக்கு 4.48 டன் வரை உலர் இலைகள் கிடைக்கும்.வணிக வாய்ப்புகள்: சீனித்துளசி முதல் ஆண்டில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், அடுத்த ஆண்டுகளில் குறைந்த செலவில் ரூ.2 லட்சம் வரையும் வருமானத்தை பெற்றுத்தரும். 

                     தற்போது உள்நாட்டு சந்தையில் சர்க்கரைக்கு நல்ல மாற்றாக உள்ள சீனித்துளசி விலை போகிறது. சீனித்துளசி இலைகளை உலர வைத்து பொடி செய்து இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், பழச்சாறுகள், ஊறுகாய்கள், ஜாம் ஆகிய பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு நுகர்வு சந்தைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. எனவே தமிழக விவசாயிகள் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் அதிக லாபம் தரும் சீனித்துளசி சாகுபடியில் ஈடுபட்டு வாழ்வில் வளம் பெறலாம் என்கிறார் அண்ணாமலைப் பல்கலை. வேளாண் பொருளாதாரத்துறை முனைவர் கே.ஆர். சுந்தரவரதராஜன்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

6 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு: மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

             புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 6 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலான 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மே 2-வது வாரத்தில் தொடங்க உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

                     தமிழகத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய சுமார் 6,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு, கடந்த 2009-ல் அறிவித்தது. 1:5 விகிதாசாரத்தில் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பதிவு மூப்பு அடிப்படையில் 32 ஆயிரம் பேர் கொண்ட பெயர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றுள்ளது.

                       இந்த 32 ஆயிரம் பேருக்கு மே முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கான தகவல் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 32 மாவட்டங்களில் தொடங்கி நடைபெற உள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிந்த பிறகு தேர்வு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள், வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகளில் பணிக்குச் சேருவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.6,000 பணியிடங்களுக்காகப் பெறப்பட்டுள்ள 32 ஆயிரம் பேரின் மூப்பு அடிப்படையிலான பெயர் பட்டியல் h‌t‌t‌p:​‌w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.அதேபோல முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 900 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதுதவிர உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் போன்றவற்றுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 900 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்களுக்கும் மே முதல் வாரத்தில் தகவல் அனுப்பி வைக்கப்பட்டு, மே 2-வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும்.2010-2011 ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தில் சுமார் 8,900 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதுதொடர்பான அரசாணை, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் மூவர் சாவு ஏப்ரல் 30-க்குள் விசாரணை அறிக்கை தாக்கல்

 சிதம்பரம்:

                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தெரிவித்தார். 

                   அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல மாணவர் கவுதம்குமார் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி விபத்தில் இறந்ததை அடுத்த பல்கலையில் பயிலும் வடமாநில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு பல்கலைக்கழக கட்டடங்கள், பல்கலை. வேன் மற்றும் ஆட்டோக்களை சேதப்படுத்தினர். இச்சம்பவத்தின் போது, போலீஸôர் மாணவர்களை விரட்டியடித்த போது 3 பொறியியல் புல மாணவர்கள் முத்தையா நகர் அருகே உள்ள பாலமான் ஆற்றில் விழுந்து இறந்தனர். இச்சம்பவம் குறித்து தமிழக அரசு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டது.

                   அதன் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் கடந்த மார்ச் 5-ம் தேதி முதல் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணையை தொடங்கி நடத்தி வந்தார். சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் பல்வேறு தேதிகளில் பொது விசாரணை நடத்தினார். அப்போது அண்ணாமலைப் பல்கலை. இரவு காவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆட்டோ டிரைவர்கள், போலீஸôர், வடமாநில மாணவர்கள், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளிட்டோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தினார். இந்நிலையில் இறுதிகட்டமாக சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 28) மாணவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். 

பின்னர்  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் தெரிவிக்கையில் 

                  மாணவர்கள் சாவு சம்பவம் குறித்து விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கை அரசுக்கும் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மே 1 முதல் கோடை ஓவியப் பயிற்சி

 பண்ருட்டி:

               புதுப்பேட்டை ஸ்வாசிகா இயக்கம் சார்பில் கோடைக்கால ஓவியப் பயிற்சி முகாம் பண்ருட்டியில் உள்ள திருவள்ளுவர் மெட்ரிக் பள்ளியில் மே 1 முதல் 10-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் ஓவியக் கலையின் பல்வேறு நுணுக்கங்கள் பயிற்றுவிக்கப்படும். பதிவுக் கட்டணம் ரூ.20 செலுத்தி பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். இறுதி நாளன்று ஓவியப் போட்டியும், கண்காட்சியும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 98426 18876 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பெற்றோர்களின் விருப்பத்தை பிள்ளைகளின் மீது திணிக்கக் கூடாது: கி.வீரமணி

 நெய்வேலி:

                பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை பிள்ளைகளின் மீது திணிக்கக் கூடாது என நெய்வேலியில் நடைபெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தி.க.தலைவர் கி.வீரமணி பேசினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் சார்பில் நெய்வேலி லிகனைட் ஹாலில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான வாகைச் சூட வாரீர் எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற கி.வீரமணி பேசியது: 

                  பெற்றோர் தங்களது இளமைப் பருவத்தில் செய்ய வேண்டியது, தவறவிட்டு, அவற்றை தற்போது தங்களது பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ள ஆசைபடுவது சரியானது அல்ல. பிள்ளைகளை சுதந்திரமாக சிந்திக்க விட வேண்டும். அவர்களின் கருத்துக்களை ஆராய்ந்து அவற்றின் சாதக பாதகங்களை எடுத்துக் கூறலாமே தவிர, தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது என்றார் வீரமணி.

 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரமோஸ் விண்வெளி ஆராய்ச்சி மைய நிர்வாக இயக்குநர் எ.சிவதாணுப்பிள்ளை பேசுகையில், 

                 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மனித ஆற்றலை சரியாக பயன்படுத்தினால், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் கூறியது போன்று இந்தியா 2020 -ல் வல்லரசாக திகழும் என்றார். இதே போன்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் வேலூர், ஈரோடு, தருமபுரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. நெய்வேலியில் தொடங்கிய வாகைசூட வாரீர் நிகழ்ச்சி விடியோ கான்பரசிங் மூலம் மேற்கண்ட நகரங்களுக்கும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பிற்பகலில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் விடியோ கான்பரசிங் மூலம் உரை நிகழ்த்தினார். முன்னதாக பெரியார் மணியம்மை பல்கலைக் கழக பேராசிரியர் விஜயக்குமார் வரவேற்றார். என்எல்சி அதிகாரிகள் சந்திரமோகன் மற்றும் செந்தமிழ்செல்வன் வாழ்த்துரை வழங்கினர். அதியமான்நெடுமான் அஞ்சி நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சீர்காழி மெயின் ரோட்டில் விபத்தால் 'டிராபிக் ஜாம்'


சிதம்பரம் : 

                சிதம்பரம் அருகே சீர்காழி மெயின் ரோட்டில் குறுகலான பாலத்தில் பஸ்சும், லாரியும் உரசி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து தடைபட்டது.
 
                 தென்மாவட்ட பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல் லும் முக்கிய சாலையாக சிதம்பரம் - சீர்காழி சாலை உள்ளது. சாலைகளின் பல இடங்களில் குறுகிய மற்றும் உடைந்த ஆபத்தான பாலங்கள் உள்ளதால்,  இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதிகாரிகள்   நடவடிக்கை எடுக்காததால், விபத்துகள் தொடர் கின்றன. சிதம்பரம் - சீர்காழி சாலை அம்மாபேட்டை அருகே குறுகிய பாலம் வழியாக, ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். நேற்று காலை அந்தப் பாலத்தை சிதம்பரத்தில் இருந்து சென்ற தனியார் பஸ்சும், மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியும், ஒரே நேரத்தில், 'கிராஸ்' செய்தன. நடு பாலத்தில், இரண்டும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண் டன. லாரி மோதியதில், பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் உடைந்து விழுந் தது. இதனால், லாரியின் ஒருபக்க டயர், பாலத்தில் தொங்கியது.  உடன் ஜாக்கி மூலம் டயரை உயர்த்தி, பாதிப்பு  ஏற்படாமல் தடுத்தனர். லாரியும், பஸ்சும் சிக்கிக் கொண்டதால், அந்தச் சாலை வழியாக போக்குவரத்து தடைபட்டது. இதனால், சிதம்பரத்தில் இருந்து புறவழிச் சாலை வழியாக வாகனங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டன. மூன்று மணி நேரம் போராட்டத் துக்குப் பின், கிரேன் மூலம் பஸ்சும், லாரியும் பிரித்து எடுக்கப் பட்டு,  பிற்பகலில் இருந்து போக்குவரத்து துவங்கியது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், இதற்கு நிரந்தர தீர்வு காண, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணியில் தொய்வு : புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம்

 சிதம்பரம் : 

              சிதம்பரம் வெள்ளாற்று பாலம் இணைப்பு சாலை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் பி.முட்லூர்- சிதம்பரம் வரை புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
 
                 சிதம்பரம் புறவழிச் சாலை பணி 2004ம் ஆண்டு துவங்கி தற்போது தான்  இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  நில ஆர்ஜிதம், சாலையோர மரங்கள் வெட்டியது, கட்டடங்கள் இடித்தது என மூன்று ஆண்டுகள் காலம் கடந்து விட்ட நிலையில், பி.முட் லூர்-சிதம்பரம் இடையே ரூ.10 கோடி மதிப்பில் வெள்ளாற்று பாலம் பணி 2007ம் ஆண்டு துவங்கியது. ஆற்றில் அதிக தண்ணீர் ஓடியதால் மிதவை படகுகள் மூலம் 140 அடி ஆழத்திற்கு போர்வெல் போட்டு மண் பரிசோதனை நடத்தப் பட்டது. அதையடுத்து 310 மீட்டர் நீளம், 11.2 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டும் பணி துவங்கியது. பில்லர் அமைக்கப்பட்டு அதன் மேல் 10 ஸ்பேன் மற்றும் 140 கர் டர்கள் என ரெடிமேடாக செய்து பொருத்தப் பட்டு 2009ம் ஆண்டே போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் தார் தளம் போடப்பட்டு  தயாராகி விட்டது.
 
                பாலம் பணி முடிந்து பல மாதங்கள் கடந்து விட்டது. பாலத் தில் இருந்து இணைப்பு சாலை  20 அடி உயரத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் உயர்த்த வேண்டிய நிலையில் பணி தொடர்ந்து மந்தமாகவே நடந்து வருகிறது.  தற் போது செம்மண் கொட்டி ஒரு வாகனம் செல் லும் அளவிற்கு பாலத்திற்கு இணைப்பு கொடுக்கப்பட் டுள்ளது. பி.முட்லூர் தீர்த்தாம் பாளையத்தில் இருந்து சிதம்பரம் வண்டிகேட் வரையில் 6.5 கி.மீ., தூரத் தில் சி.முட்லூரில் இருந்து வண்டிகேட் வரை 3.5 கி.மீ., சாலை தார் போடப்பட்டும், சாலையை ஒழங் குபடுத்த மார்க்கிங், சாலை அரிப்பு ஏற்படாமல் இருக்க புற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. முக் கியமான இடங்களில் பாறாங் கற்கள் கொண்டு பக்கவாட்டு சிலாப் அமைக் கப்பட்டு வருகிறது.
 
                  மூன்று கி.மீ., தூரமான பி.முட்லூர்- சி.முட்லூர் வரை பாலத்தின் இரு புறமும்  அரை கி.மீ., தூரத் திற்கு செம்மண் கொட்டி உயர்த்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. செம்மண் பாதையில் கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த சிரமத்திற்கிடையே வாகனங்கள் சென்று வருகிறது. பி.முட்லூரில் இருந்து சிதம்பரத்திற்கு புவனகிரி வழியாக 16 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் புறவழிச்சாலை வழியாக எட்டு கி.மீ., குறைந்து விடும்.  அத்துடன்  போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக தவிர்க் கப்படுவதால், சிரமமாக இருந்தாலும் இச்சாலையில் விரும்பிச் செல்கின்றனர். பி.முட்லூர்- சி.முட்லூர் வரை சாலைப் பணியை விரைவில் முடித்து பயன் பாட்டிற்கு திறந்துவிட் டால் கடலூர் மார்க்கமிருந்து வரும் வாகனங்கள் மட்டுமல்லாது கிள்ளை, சி.முட்லூர், பரங்கிப் பேட்டை, பு.முட்லூர் சுற்றுப் பகுதியை சேர்ந்த 40க் கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் பயனடைவர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திறந்தவெளி பாரான 'வெள்ளாறு' பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சம்


திட்டக்குடி:

              வெள்ளாறு திறந்தவெளி 'டாஸ் மாக்' பாராக மாறி வருவதால் பெண்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
 
                 திட்டக்குடி நகர் புறத்தில் தாலுகா அலுவலகம் முன்புறம், பெருமுளை ரோடு செல்லும் வழி, கூத்தப்பன்குடிக்காடு ஆகிய மூன்று இடங்களில் அரசு மதுபான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு திட்டக்குடி நகர் புற மற்றும் பல் வேறு கிராமங்களிலிருந்தும் 'குடி'பிரியர்கள் மது அருந்துவர். அதுமட்டுமின்றி பெரம்பலூர் மாவட்ட எல்லையான அகரம்சீகூர் 'டாஸ்மாக்' கடையும் உள்ளது. பெரும்பாலான 'குடி' பிரியர்கள் மாலை நேரத் தில் டாஸ்மாக்கில் வாங்கும் மதுபானங்களை காற்றோட்டமாக 'ஹாயாக' வெள்ளாற்றில் அமர்ந்து குடிக்கின்றனர். வெள்ளாற்றில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்ததால் அப்பகுதியில் 'சைடிஷ்' கடைகள் துவங்கப் பட்டு அமோகமாக வியாபாரம் நடக்கிறது. வெள் ளாற்றில் மது அருந்துபவர்கள் தரைப்பாலத்திலேயே தங்களது இரு சக் கர வாகனங்களை நிறுத் திவிட்டு செல்கின்றனர்.
 
                 இங்கு மேம்பாலமாக தரம் உயர்த்தப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வரும் நிலையில் அப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைகின்றனர். இதுபற்றி கேட்டால் வாகன ஓட்டிகள் தாக்கப்படுகின்றனர். தவிர வெள்ளாறு செல்லும் வழியில் திருமஞ்சன வீதி, ஆற்றங்கரை தெரு பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளாற்றின் அருகே திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இருள் சூழ்ந்த பின், இயற்கை உபாதைக்காக செல்லும் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. 'குடி'போதையில் சில விஷமிகள் பெண்கள் மீது கல் வீசுவது, டார்ச் லைட் அடிப்பது போன்ற சில்மிஷங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் குடித்து விட்டு பிளாஸ்டிக் கப்புகள், பை, பாட்டில்கள் என அப்படியே வெள் ளாற்றில் வீசிவிட்டு செல்கின்றனர். நாளுக்கு நாள் 'குடி' பிரியர்கள் வெள்ளாற்றுக்கு வருவது அதிகரிப்பதும், அவர்களின் கொட்டமும் அதிகரித்து வருகிறது. இதற்கு யார் நடவடிக்கை எடுப்பது?

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

இந்தியாவின் முன்னோடி கிராமமான கீரப்பாளையத்தில் முடங்கியது வளர்ச்சித் திட்டங்கள்

 கீரப்பாளையம்:

              சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு, முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேரடியாக வந்து சென்ற பெருமைக்குரிய கீரப் பாளையம் ஊராட்சியில் தற்போது அனைத்து வளர்ச் சித் திட்டங்களும் செயல்படுத்தப்படாமல் முடங்கிப் போய்யுள்ளது.
 
              சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் ஊராட்சி இந்தியாவில் முன் னோடி கிராமமாக தேர்வு செய் யப்பட்டு, தூய் மையான கிராமம் என அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் விருது வழங் கினார். கிராமத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டும் சென் றார். அத்தனை பெருமைக்குரிய ஊராட்சியில் இன்று அனைத்தும் தலைகீழாக காணப்படுகிறது.   கீரப்பாளையம் ஊராட்சியில் 2005ம் ஆண்டு அரசு மூலம் 35 லட்சம் ரூபாய்  செலவில் விறகிலிருந்து மின் சாரம் தயாரிக்கும் திட்டத்தை அப்போதைய கலெக்டர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் மாஜி அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார்.
 
                 இத்திட்டத்தை  நிர்வகிக்கும் பொறுப்பு அப்பகுதி மகளிர் சுய உதவிக்குழுனரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதன் மூலம் கிடைத்த மின்சாரம் கீழகீரப்பாளையம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற் றும்  தெருவிளக்கு எரிய பயன்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் ஆறுமாதம் கூட நிறைவடையாத நிலையில்  முறையான பராமரிப்பின்றி திட்டம் செயலிழந்தது. இதே போன்று ஜவகர் வேலை வாய்ப்புத் திட் டத் தில் 1997-98ல் கட்டப் பட்ட சமுதாய கழிவறை, குளியலறை கட்டடங்கள் மற்றும் அதனை பொதுமக்கள் பயன் படுத்துவதற்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் போடப் பட்ட  கைப்பம்பு என அனைத்தும் பாழானது.
 
                        ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இரண்டு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் பொதுமக்கள் பயனடைய நவீன கட்டண கழிவறைகள் கட்டப்பட்டன. தற்போது அருகே உள்ள செப்டிக் டேங்க்கிலிருந்து கழிவு நீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அக் ட்டடம் அருகே இயங்கி வரும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு தினசரி சான்றிதழ், பட்டா மாற்றம் உள்ளிட்ட சான்றுகளுக்காக வரும் பொதுமக்கள் மூக்கைப் பிடித் துச் செல்லும் அவல நிலையும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமின்றி, கீழகீரப் பாளையம் பகுதியில் வசிக்கும் 700 குடும்பங்கள் பயனடையும் வகையில் 1996ம் ஆண்டு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியின் மேல்பகுதியில் இருந்த சிமென்ட் காரைகள் பெயர்ந்து வலுவிழந்தது.  இதனால் பொதுமக்ளுக்கு குடிநீர் வழங்குவது கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடும் செய்து தராததால் பொதுமக்கள் குடிநீருக்கு அல்லாட வேண்டிய நிலை உள்ளது. முன்னாள் ஜனாதிபதி கையால் இந்தியாவிலேயே சிறந்த ஊராட்சிக்கான ஜனாதிபதி விருது வாங்கிய கீரப்பாளையம் இன்று திட்டங்களை முறையாக செயல்படுத்தாததால் முற்றிலும் முடங்கியது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 5 நிமிடத்தில் முடிந்த பண்ருட்டி நகர மன்ற கூட்டம்

 பண்ருட்டி :

            பண்ருட்டி நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
                  பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது.  சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.  துணை சேர் மன் கோதண்டபாணி,  பொறியாளர் சுமதி செல்வி,  சுகாதார அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் கருப்பு சட்டை, பேண்ட் அணிந்தும், பெண்  கவுன்சிலர்கள் கருப்பு சேலைகள் அணிந்தும் வந்தனர்.  கூட்டம் துவங்கியவுடன் தி.மு.க., கவுன்சிலர் ரகூப் தனது வார்டில் குடிநீர் பிரச்னை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட பழைய பைப்களை மாற்றி புதியதாக அமைக்க வேண்டும் என்றார். தி.மு.க.கவுன்சிலர் தட்சணாமூர்த்தி 'துப்புரவு பணிகள் நடைபெறவில்லை. பணியாளர்கள் வருவதில்லை, சம்பளம் மட்டும் எப்படி வழங்குகிறீர்கள். மண்வெட்டி, சவுள் இல்லை என கூறுகின்றனர்' என்றார். அ.தி.மு.க.,கவுன்சிலர் பன்னீர் செல்வம் 'கடந்த கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கைக்காக பேசிய எங்கள் மீது  சேர்மன் கொடுத்த பொய் வழக்கு காரணமாக நாங்கள் நீதிமன்ற ஜாமீனில் வெளியில் வந் துள்ளோம். கவுன்சிலர் ரமாதேவி கொடுத்த புகாரில் சேர்மன் உள் ளிட்ட ஆறு தி.மு.க., கவுன்சிலர் மீது கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு சேர்மன் ஜனநாயக முறையில் பதில் கூற வேண்டும். அதுவரை கூட்டம் நடத்த விடமாட்டோம்' என்றார்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சேர்மன் பச்சையப்பன் தீர்மானம் நிறைவேறியதாக அறிவித்து விட்டு நகரமன்ற கூடத்தை விட்டு வெளியேறினர். அவரை தொடர்ந்து  தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள்  வெளியேறினர்.  பின் அ.தி.மு.க., கவுன்சிலர்கள்  சேர்மன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சியின் சீர் கேட்டை  கண்டித்து நகராட்சி வாயில் முன் கோஷம் எழுப்பி கலைந்து சென்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

அனைத்து மாதங்களிலும் ரேஷன் பொருள்கள் வாங்க வேண்டுமென நிர்பந்தம் கிடையாது : கலெக்டர் சீத்தாராமன் விளக்கம்


கடலூர் : 

               ரேஷன் கார்டுதாரர்கள் அனைத்து மாதங்களிலும் பொருள்கள் வாங்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது என கலெக்டர் கூறியுள்ளார்.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: 

                 ரேஷன் கார்டில் தொடர்ந்து மூன்று மாதங் களாக பொருள்கள் வாங் காமல் இருந்தால் அந்த அட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற புகார் வந்துள்ளது. ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி பொருள்கள் வாங்குவதோ வாங்காமல் இருப்பதோ  கார்டுதாரர்களின் முழு உரிமை. ஆகையால் தொடர்ந்து பொருள் கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் கார்டுகள் நிறுத்தி வைக்கக் கூடாது.
                அதோடு பல மாதங்களாக வாங்காமல் தேவைப்படும் போது பொருள்கள் வாங்கச் செல்லும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்க கூடாது.  மேலும் அவர்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ரேஷன் கார்டுதாரர்கள் அனைத்து மாதங் களிலும் பொருள்கள் வாங்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. அவர்களுக்கு தேவையான சமயங்களில் தேவையான அத்தியாவசிய  பொருள்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக குறைகள் இருப்பின் அட்டைதாரர்கள் 04142-230223 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் ரூ.4.38 கோடியில் தயாராகி வருகிறது

கடலூர் : 

                கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் 4.38 கோடி ரூபாயில் நவீன தொழில் நுட்பத்துடன் வேகமாக தயாராகி வருகிறது.
 
                       கடலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் போக்குவரத்து, ஆயுத கிடங்கு, ஆயுதப்படை அலுவலகம் உட்பட பல பிரிவு  செயல்படுறது. இதனால் இட பற்றாக்குறையால் அமைச்சுப் பணியாளர்கள் தவித்து வந்தனர். இது தவிர பல இடங்களில் வாடகை கட்டடத்தில் காவல்துறை அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களை ஒருங்கிணைத்து ஒரே கட் டடத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அலுவலகம் கட்ட அரசு 4.38 கோடி ரூபாய் ஒதுக்கியது. அதன்படி பிரம்மாண்ட ஒருங்கிணைந்த மாவட்ட போலீஸ் அலுவலக கட் டட பணி  கடந்த செப்டம் பர் மாதம் துவங்கியது.  

                  ஒரு ஆண்டு காலத்தில் முழுவதும் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கம்பெனி கட்டடப் பணியை மேற்கொள்கிறது. இக் கட்டடம் மொத்தம் 32 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களைக் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இதில் உள்ள அனைத்து அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு 'நெட்ஒர்க்'கில் இணைக்கப்படுவது சிறப்பம்சமாகும். இதுதவிர  கூட்டம் நடத்துவதற்கு நவீன வசதியுடன் கூடிய அரங்கு, பயிற்சி காவலர்களுக்கென கூட்ட அரங்கு அமைக்கப்படுகிறது. பல் வேறு இடங்களில் செயல் பட்டு வரும் காவல்துறை அலுவலகங்கள் இந்த புதிய கட்டடத்தில் செயல் படவுள்ளன.


Read more »

தொழிலாளர் தினத்தில் கிராம சபைக் கூட்டம் : ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் உத்தரவு

 கடலூர் : 

            தொழிலாளர் தினத்தையொட்டி அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களும் கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
 
                   மே முதல் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், தேதி, நேரம் மற்றும் விவாதிக்கப்படவுள்ள பொருள்கள் பற்றி ஊராட்சி மன்ற கட்டடத்திலும், தொலைக் காட்சி அறை, சமுதாயக் கூட கட்டடங்களிலும் மக்கள் பார்வையில் தெரியும் படி விளம்பர பலகையில் எழுதியும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் விளம்பரப்படுத்த வேண்டும். இக் கூட்டத்தில் 'கான்கிரீட்' வீட்டு வசதித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சமூக தணிக்கை செய்தல், 2010-11ம் ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்ந் தெடுக்கப்பட்டு தொழில் நுட்ப அங்கீகாரம் பெறப்பட்ட பணிகளை கிராம சபையில் வைத்து அங்கீகரித்தல், பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். இந்த பணியை மேற் பார்வையிட ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒரு பற்றாளர் அனுப்பப்படுகின்றனர். கூட்டத்தில் உள் ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழு மற்றும் பொது மக்கள் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மின் தடையால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது! பணிகள் முடங்கியதால் மக்கள் அவதி

கடலூர் : 

                      பராமரிப்பு பணிக்காக நேற்று கடலூரில் காலை முதல் மாலை வரை மின் நிறுத்தம் செய்ததால் அரசு அலுவலகங்களில் பணிகள் முற்றிலுமாக பாதித்தது.
 
                 மின்சாரம் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு மின் வாரியம் சென்னை தவிர்த்து மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் தினசரி மூன்று மணி நேரம் மின் நிறுத்தம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுகிறது.  கடலூர் மாவட்டத்தில் இரண்டு மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பகல் நேரங்களில் மின்சாரமின்றி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்தடை காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் தேக்கமடைகிறது. அரசு அலுவலகங்களில் போதிய இடப் பற்றாக் குறையினால் ஏற்கனவே புழுக்கத்தில் ஊழியர்கள் வேலை செய்து வரும் நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசி வருவதால் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று மணி நேரம் மின்தடையால் கம்ப்யூட்டர்,  ஜெராக்ஸ் மற்றும் பேக்ஸ் போன்ற கருவிகளை இயக்க முடியாததால் அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள் தடைபடுகிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் அமர்ந்து வேலை பார்க்க முடியாமல் காற்றோட்டமாக அலுவலகத்தை விட்டு வெளியேறி விடுகின்றனர். இதனால் மின் தடை நேரங்களில் பெரும் பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது.
 
               இந்நிலையில் கடலூர் கேப்பர் மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நேற்று மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இதன் காரணமாக வண்டிப்பாளையம்,  பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், கடலூர் முதுநகர், துறைமுகம், தேவனாம்பட்டினம், புதுப்பாளையம், பீச்ரோடு, வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம் பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மின் நிறுத்தம் செய்யப் பட்டது. மாவட்டத்தின் பிரதான அலுவலகமான கலெக்டர் அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், தாலுகா அலுவலகம், கால் நடை துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் மின் தடை காரணமாக நேற்று பணிகள் முற்றிலுமாக பாதித்தது. நேற்று காலை 11 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அலுவலகங்களில் புழுக்கத்தில் உட் கார முடியாமல் அருகில் உள்ள மரத்தடியில் தஞ்சமடைந்தனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
 
                      இதனை அறியாமல் நேற்று பல்வேறு பணி காரணமாக கிராமங்களில் இருந்து வந்த மக்கள் அரசு அலுவலகங்கள் முன் காலை முதல் மாலை வரை காத்திருந்தும் தங் களது பணியை முடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திட மக்கள் அதிகம் வந்து செல்லும் பிரதான அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் மின் தடை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அதேபோன்று பரமரிப்பு பணிக்காக ஒரு நாள் முழுவதும் மின்சாரம் நிறுத்துவதையும் விடுமுறை தினங்களில் செய் தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்காது. அதேநேரத்தில் வெகு தொலைவில் இருந்து வரும் கிராம மக்களும் தங்களது பணிகளை எளிதாக முடித்துக் கொண்டு செல்ல முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

காஸ் இணைப்பு பெறுபவர்களிடம் அடுப்பு வாங்க வற்புறுத்த கூடாது


பண்ருட்டி : 

              புதிய காஸ் இணைப்பு பெறும் போது அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கத் தேவையில்லை என பாரத் காஸ் நிறுவன தஞ்சாவூர் மண்டல துணை மேலாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
 
பண்ருட்டியில் உள்ள காஸ் ஏஜன்சியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பாரத் காஸ் நிறுவன தஞ்சாவூர் மண்டல துணை மேலாளர் முத்துசாமி கூறியதாவது: 

               பண்ருட்டி காஸ் நுகர் வோர் குறைகள் குறித்து ஆய்வு செய்தோம். நுகர்வோர் தேவைகேற்ற சிலிண்டர்களை ஏஜென் சிகள் சப்ளை செய்ய வேண்டும். நகரத்தில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் கிடையாது.  ஏஜென்சி குடோன் களில் இருந்து 5 கிலோ மீட்டர் தள்ளி உள்ள கிராமங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1.40 பைசா கூடுதல் கட்டணம் வசூல் செய்து கொள் ளலாம். சீராக சப்ளை செய்யாத ஜெயா காஸ் ஏஜன்சியில் இருந்து 4 ஆயிரம் இணைப்புகள் பண்ருட்டி ராதா மற்றும் நெய்வேலி ஏஜென்சிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும்  சேவை வழங்காததால் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய இணைப்பு மற்றும் மாற்றுதல் இணைப்பு பெறும் போது நுகர்வோர்களிடம் காஸ் அடுப்பு, சமையல் எண் ணெய் உள்ளிட்ட பொருட் கள் வாங்க நுகர்வோர்களை வற்புறுத்தக் கூடாது. நுகர்வோர் தங்களுக்கு சிலிண்டர் மட்டும் போதும் என  தெளிவாக கூற வேண்டும். மீறி வற் புறுத்தினால் எங்கள் அலுவலகத்திற்கு புகார் செய்யலாம். இவ்வாறு முத்துசாமி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திருப்பாதிரிப்புலியூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுப்பார்களா

 கடலூர் : 

              விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் செல்லும் புதிய ரயில்கள் கடலூரில் நிறுத்தம் இல்லாததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
 
               விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் கடந்த 24ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த பாதையில் இயக்கப்பட்ட சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது மீண்டும் இயக்கப்படுகிறது. மாவட்டத் தலைநகரான கடலூரில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்துதான் பல்வேறு இடங்களுக்கு அதிகமான பயணிகள் செல்வது வழக்கம். ஆனால் திருப்பாதிரிப்புலியூரில் சோழன் எக்ஸ்பிரஸ் நிற்காமல் செல்வதால் பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோல் வரும் மே 2ம் தேதி முதல் ராமேஸ்வரம் - புவனேஸ்வர் (எண். 8495), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 4260), ராமேஸ்வரம் - புவனேஸ்வர் (எண் 4259), புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (எண் 8496) ரயில்கள் வரும் மே 2ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.  இந்த ரயில்கள் அனைத்தும் விழுப்புரம் ஜங்ஷனுக்கு பிறகு மயிலாடுதுறையில் மட்டுமே நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரைக் கடந்து செல்லும் ரயில்கள் மாவட்ட தலைநகரான கடலூரில் நிற்காமல் செல்வதால் பயணிகள் கவலையடைந்துள்ளனர். எனவே திருப்பாதிரிப்புலியூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மானிய விலையில் நெல், உளுந்து விதைகள்

 பண்ருட்டி : 

               பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் நெல், உளுந்து விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.
 
                பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் ஏ.டி.டி., 45 ரகம் நெல் 50 சதவீத மானிய விலையில் ஒரு கிலோ 9 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டி.எஸ்., உளுந்து ரகம் 50 சதவீத மான்யவிலையில் 55 ரூபாய்க்கும், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஜிப்சம் உரம் 400 கிலோ 1,220.80ல் மானியம் 750 போக 471 ரூபாய்க்கும், சிங்க்கல் பேட் ஒரு கிலோ 33.30க்கு மானிய விலையில் 17.30 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பூச்சிக் கொல்லி மருந்து அசாடிராக்டின் இரண்டரை லிட்டர் 268ல் இருந்து மானியம் 128 போக 140க் கும், பாசிலஸ் துரிஞ்சி அரை  லிட்டர் 379க்கும் 189 போக 190 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கால்நடை மருத்துவ முகாம்

 கடலூர் : 

                  ராமாபுரத்தில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமில் 1,170 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நீர் வள நில வள மேம்பாட்டுத் திட்டத்தில் கால்நடைகளுக்கு மலட்டுத் தன்மை நீக்கல் சிறப்பு மருத்துவ முகாம் கடலூர் அடுத்த ராமாபுரம் ஊராட்சியில் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை ஆய்வாளர் ராஜமச்சேந்திரன் வரவேற்றார்.
 
                கால்நடைத் துறை மண் டல இணை இயக்குனர் இளங்கோவன் துவக்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் கமலக்கண்ணன், ராமமூர்த்தி, முருகேஸ்வரி, மோகன் உள்ளிட்ட குழுவினர் கால்நடைகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அதில் 622 கால் நடைகளுக்கு தடுப்பூசியும், 346 ஆடுகளுக்கு குடற் புழு நீக்கம், 74 பசுக்களுக்கு சினை பரிசோதனை, 25 பசுக்களுக்கு செயற்கை முறையில் கருவூட்டல், 38 கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை நீக்கல் மற்றும் 65 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

உலக ஆரோக்கிய தினவிழா

 சிதம்பரம் : 

                    இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உலக ஆரோக்கிய தின விழா கொண்டாடப்பட்டது.
 
               வேளாண் புல தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.  ஒருங்கிணைப்பாளார் டார்வின் கிறிஸ் துதாஸ் ஹென்றி  வரவேற்றார். ராஜா முத்தையா மருத்துக் கல்லூரி சுகாதாரத் துறை தலைவர் எத்திராஜன், வேளாண்  உழவிவியல் துறை தலைவர் கதிரேசன், வேளாண் விரிவாக்கத்துறை பேராசியர் சாந்தா கோவிந் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நிகழ்சியில் சிறப்பாக பங்கேற்ற செஞ்சிலுவைச் சங்க மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. தாமரைச் செல்வி, நம்பி பங்கேற்றனர். பாலமுருகன் நன்றி கூறினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டியில் மனுநீதி நாள் முகாம்

 பண்ருட்டி : 

              பண்ருட்டி அடுத்த காவனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.
 
                ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கந்தசாமி பொதுமக்களின் மனுக்களை பெற்றார். ஊராட்சி தலைவர் தட்சணாமூர்த்தி முன் னிலை வகித்தார். முகாமில் பட்டா மாறுதல், முதியோர் உதவி தொகை கோருதல் உள்ளிட்ட 306 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 11 பேருக்கு பட்டா, 11 பேருக்கு முதியோர் உதவி தொகை, 6 பேருக்கு ரேஷன் கார்டுகளையும் வழங்கினார்.  தாசில்தார்கள் பாபு, மங்களம், மண்டல தாசில்தார் நாசீர், டி.எஸ்.ஓ., சுப்ரமணியன், வருவாய் ஆய்வாளர் பூபால சந்திரன், டாக்டர் அறிவொளி, மின் வாரிய உதவி பொறியாளர் இந்துமதி, துணை பி.டி.ஓ., அருணாச்சலம்  உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மஞ்சக்கொல்லை கிராமத்தில் சித்ரா பவுர்ணமி விழா

 சிதம்பரம் : 

            மஞ்சக்கொல்லை கிராமத்தில் சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி தண்டபாணி சுவாமி வீதியுலா நடந்தது.
 
              புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை தண்டாயுதபாணி கோவிலில் 95ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா கடந்த 19ம் தேதி கொடியேற் றத்துடன்  துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. நேற்று முன்தினம் 27ம் தேதி தண்டாயுதபாணி சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று 28ம் தேதி சித்ரா பவுர்ணமி பெருவிழா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறக்கட் டளையினர் மற்றும் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கோவில் சொத்துக்களை மீட்க கடலூர் நகர பா.ஜ., வலியுறுத்தல்

கடலூர் : 

                கடலூரில் உள்ள அனைத்து கோவில் சொத் துக்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.
 
                   கடலூர் நகர பா.ஜ., ஆலோசனைக் கூட்டம் புதுப்பாளையத்தில் நடந்தது. தாமரை வெங்கடேசன் தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு குணா முன்னிலை வகித்தார். வக்கீல் சுரேஷ் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், கடலூர் மாவட்டத்திற்கு வரும் மே 1ம் தேதி வருகை தரும் பா.ஜ., தமிழக  தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. நோயாளியாக சிகிச்சை பெற வந்த பார்வதி வேலுப்பிள்ளையை போராளியின் தாயாக நினைத்து சிகிச்சை தர மறுத்த இந்திய, தமிழக அரசை பா.ஜ., வன்மையாக கண்டிப்பது. கடலூரில் உள்ள அனைத்து கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய அமைப்பாளர்கள் கோபால், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் வரதராஜன், வேம்புராஜன், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

 சிறுபாக்கம் : 

             மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்களின் அவசர கூட்டத்தில் மானிய நிதியில் தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்தாய்வு நடந்தது.
 
              மங்களூர் ஒன்றிய கவுன்சிலர்களின் அவசர கூட்டம், ஒன்றிய வளா கத்தில் நடந்தது. சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். துணை சேர் மன் சின்னசாமி, ஆணையர்கள் ஜெகநாதன், ராஜாராம் முன்னிலை வகித்தனர். கருப்புசாமி வரவேற்றார். கூட்டத்தில் பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மானிய நிதியில் தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கவுன்சிலர்களுக்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டது. இதில் புதிய சமையலறை கட்டுதல், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கு தொகுப்பு வீடுகள் வழங்குதல், மரம் நடுதல், மர வேலிகள் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், முழு நேர ரேஷன் கடை கட்டடங்கள் கட்டுதல், நிரந்தர வெள்ள தடுப்பு கட்டுமான பணிகள் மேற் கொள்ளுதல் உள்ளிட்ட 21 பணிகள் தேர்வு செய்திட கலந்தாய்வு நடந்தது. பொறியாளர் மணிவேல், கவுன்சிலர்கள் சந்திரபாபு, ராஜன், பொன் முடி, மணிமொழி, சேகர், பூமாலை, அம்பிகா, கண்ணகி, கொளஞ்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior