உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் கடலூரில் வரும் 15ம் தேதி ஏலம்

கடலூர் : 

               கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வரும் 15ம் தேதி ஏலம் விடப்படுகிறது.

           கடலூர் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் இரண்டு சக்கர வாகனங்கள் 42, மூன்று சக்கர வாகனம் ஒன்று, நான்கு சக்கர வாகனம் மூன்று என மொத்தம் 53 வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. இவ்வாகனங்கள் வரும் 12ம் தேதி முதல் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. கடலூர் எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., கடலூர் கலால் பிரிவு உதவி ஆணையர், அரசு தானியங்கி பணிமனை பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் 15ம் தேதி ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுப்பவர்கள் வாகன உரிமையாளர்கள் என்றால் ஏலத் தொகையுடன் 12.5 சதவீதமும், இல்லாத பட்சத்தில் 4 சதவீத விற்பனை வரியும் செலுத்த வேண்டும். ஏலம் கேட்க விரும்புவோர் இரு சக்கர வாகனத் திற்கு 500 ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயும், முன்பணமாக 15ம் தேதி காலை 8.30 மணிக்குள் மது விலக்கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

               ஏலம் எடுக்க வருபவர்கள் விலாசத்தை உறுதி செய்யும் வகையில் ரேஷன் கார்டு, பாஸ் போர்ட், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ் புக், இவற்றில் ஏதேனும் ஒன்றை அசல் நகல், ஜெராக்ஸ் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் வரவேண்டும். 

மேலும் தகவல்களுக்கு 

கடலூர் ஏ.டி.எஸ்.பி., 04142-284353, 
கடலூர் மது விலக்கு அமல் பிரிவு 04142 297688, 
சிதம்பரம் 04144-230477,
பண்ருட்டி 94441-80458 

ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior