சிதம்பரம் :
சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாததால் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர்.
விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகள் இடைவெளியில் ரயில்கள் ஓடுவதால் அரசு ஊழியர்கள், கல் லூரி மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இரண்டு மாதங்களாக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் சிதம்பரம் ரயில் நிலைய பணிகள் இன்னும் முழுமையடையவில்லை. பயணிகளுக் கான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி என எதுவும் செய் யவில்லை. சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் அமர இருக்கை இல் லாமல் தரையில் அமர்ந்து காத்திருக்கின்றனர். விளக்கு வசதி இல்லாததால் ரயிலை விட்டு இறங் கும் போதும், ஏறும் போதும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ரயில்வே பிளாட்பாரம் கிராசிங் நடை பாலம் (புட்பாத்) அமைக்கும் பணியும் தொய்வான நிலையிலேயே உள்ளது. இதனால் மாற்று பிளாட் பாரத்தில் வரும் ரயில்களில் ஏற பயணிகள் தவிக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு துவங்கிய ரயில் நிலைய முக்கிய கட்டட பணி இதுவரை முடியவில்லை. பல கான்ட்ராக்டர்கள் ஓட்டம் பிடித்த பின்னர் தற்போது ரயில்வே நிர்வாகமே கட்டி வருகிறது. ஆனால் இதுவரை முடிந்தபாடில்லை. இதனால் இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டடத்தில் டிக்கெட் கவுண்டர், அலுவலகம் இயங்கி வருகிறது. ஒரே ஒரு டிக்கெட் கவுண்டர் இருப்பதால் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். ரயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் போர்க்கால நடவடிக்கையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக