உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

புவனகிரி பள்ளி முன் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை

புவனகிரி : 

                 புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

                     புவனகிரி அரசு ஆண் கள் மேல்நிலைப் பள்ளியில் பெருமாத்தூர், வண்டுராயன்பட்டு, பு.உடையூர், வடக்கு திட்டை, தெற்கு திட்டை, தம்பிக்குநல்லான்பட்டினம், ஆதிவராகநல்லூர், கீழமணக் குடி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 1,500க்கும் மேற் பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் முன்புறம் ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தங்களது சிமென்ட் சிலாப்புகள், பெரிய மரத்துண்டுகள் உள்ளிட்ட பொருட் களை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

                          பள்ளியின் முன் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதற்கும், பாத்திரங்களை கழுவுவதற்கும் வசதியாக போர்வெல் பம்ப் போடப்பட்டது. அதிலிருந்து தண்ணீர் வெளியேறி அதனருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் நிரம்பும். அந்த பள்ளத்தின் அருகே ஆக்கிரமிப்பாளர்கள் மெகா சிமென்ட் உருளைகள் மற்றும் தளவாட பொருட்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி பள்ளி முன் உள்ள ஆக்கிரமிப்புகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior